Bigg Boss Tamil 6 Eviction: கேப்டன் ஆன அமுதவாணனுக்கு செம ஆப்பு? இந்த வாரம் வெளியேற போவது யார்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் கிராண்ட் ஃபினாலே வரவுள்ள நிலையில், இந்த வாரம் கேப்டனாக மாறிய அமுதவாணனும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இந்த வாரம் நாமினேஷன் சற்றே வித்தியாசமான முறையில் நடைபெற்றது. ரெட் கார்டு வந்தால் நாமினேஷன், க்ரீன் கார்டு வந்தால் ஒருவரை சேவ் செய்யலாம். மஞ்சள் கார்டில் இதுவரை என்ன விளையாடி கிழித்து விட்டீர்கள் என வாசகம் போட்டு பிக் பாஸ் டீமே இந்த சீசன் போட்டியாளர்களை கழுவி ஊற்றி உள்ளது.

யார் யார் டீமாக செயல்படுகின்றனர் என்றும் இந்த போட்டியின் மூலம் எளிதாக ரசிகர்கள் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ரச்சிதாவை தவிர

ரச்சிதாவை தவிர

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனுக்காக ரெட் கார்டு, க்ரீன் கார்டு கேம் விளையாடப்பட்டது. அதில், ஒரு ரெட் கார்டு கூட கிடைக்காத ரச்சிதா நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் அடுத்த வாரமும் விளையாட அழகாக சேவ் ஆகி விட்டார். ரச்சிதாவை தவிர்த்து அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு ரெட் கார்டு முதல் 6 ரெட்கார்டு வரை கிடைத்த நிலையில், அனைவரையும் பிக் பாஸ் நாமினேஷனுக்கு தள்ளி விட்டார்.

கேப்டன் பாவம்

கேப்டன் பாவம்

இந்த வாரம் எப்படியாவது அசீமை வீழ்த்தி கேப்டனாக மாறி நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த அமுதவாணன் சார் உங்களுக்கும் இந்தாங்க ரெட் கார்டு நாமினேஷனை எதிர்கொள்ளுங்கள் என சக போட்டியாளர்கள் ஆப்பு வைத்து விட்டனர்.

வசமா சிக்கிட்டாங்க

வசமா சிக்கிட்டாங்க

வழக்கம் போல இந்த வாரமும் அதிக ரெட் கார்டுகளுடன் அசீம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். அசீமை தொடர்ந்து ஏடிகே, மணிகண்டன், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி மற்றும் கதிர் என அத்தனை போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.

டேஞ்சர் ஜோனில் யார்

டேஞ்சர் ஜோனில் யார்

கடந்த வாரம் விளிம்பில் சிக்கி எஸ்கேப் ஆன மைனா நந்தினி, அசீம் இருவருமே இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து கிட்னி ஸ்டோன் வலியால் அவதிப்பட்டு வரும் ஏடிகே மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

அதிக ஓட்டுக்கள்

அதிக ஓட்டுக்கள்

கடந்த வாரம் அதிக ஓட்டுக்களுடன் சனிக்கிழமையே சேவான விக்ரமன் மற்றும் ஷிவின் இந்த வாரமும் சேஃப் ஆகவே உள்ளனர். இவர்கள் இருவரை தொடர்ந்து கதிர் மற்றும் அமுதவாணனுக்கு கணிசமான ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நிலையில் 3 போட்டியாளர்கள் போட்டிப் போட்டு வருகின்றனர்.

இருவரில் ஒருவர்

இருவரில் ஒருவர்

மணிகண்டன், மைனா நந்தினி மற்றும் ஏடிகே மூன்று பேரில் யார் வெளியே போனாலும் ரசிகர்களுக்கு ஹாப்பி தான். நாமினேஷனிலேயே ஒட்டுமொத்த வன்மத்தையும் கக்கிய மணிகண்டன் மீது தான் பலரும் டார்கெட் வைத்துள்ளனர். அதே சமயம் ஏடிகேவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவரை இந்த வாரம் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 3 வாரங்களாக பெண் போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரம் மைனா வெளியேறமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X