அசீமுக்கு பதில்..வெறிகொண்டு பாய்ந்த மணிகண்டன்..தனலட்சுமியிடம் அத்துமீறல்..அரண்டுபோன ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் வீட்டில் மேன் ஹேண்டில் செய்வது மீண்டும் தொடங்கியது. இம்முறை மணிகண்டன் தனலட்சுமி மோதல் வெடித்தது.

பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு எதிராக அவதூறு பேசி வாங்கிக்கட்டிக் கொண்ட அசீம் அடக்கி வாசிக்கிறார் ஆனால் இன்றைய டாஸ்க்கில் அசீம் இடத்தை மணிகண்டன் எடுத்துக் கொண்டார்.

மணிகண்டன் டாஸ்க்கில் தனலட்சுமியை பெண் என்றும் பாராமல் கடுமையாக மேன் ஹாண்டில் செய்ததால் கடும் சண்டை மூண்டது.

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் வெறித்தனம்

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் வெறித்தனம்

பிக் பாஸ் சீசன் 6 மற்றும் சீசன்களை விட விறுவிறுப்பாக செல்கிறது. சின்ன வத்திக்குச்சி பத்த வைத்தாலும் பெரும் தீயாய் எரியும் அளவில் போட்டியாளர்கள் மல்லுகட்டுகின்றனர். கடந்த சீசனை விட இந்த சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. அதே நேரம் போட்டியாளர்கள் பொறுமை இல்லாதவர்களாக இருப்பதையும் காண முடிகிறது. வழக்கம் போல் இருக்கும் மிச்சர் பார்ட்டிகளை தவிர்த்து பார்த்தால் ஒரு சிலர் அத்துமீறல் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் அசீம் மிக கடுமையாக மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொண்டார்.

அடங்கிய அசீம் எகிறிய மணிகண்டன்

அடங்கிய அசீம் எகிறிய மணிகண்டன்

வார்த்தைகளை விடுவது, முறைத்துக் கொண்டு அடிப்பது போல் பாய்ந்து செல்வது, மிரட்டுவது, பெண்களை மேன் ஹாண்டில் செய்வது என்று இருந்த அசீம் முதல் வாரம் லேசாக கண்டிக்கப்பட்டார். அடுத்த வாரம் தனலட்சுமியிடம் கடுமையாக மோதி தள்ளி விட்டு, ஷிவினை பாடி ஷேமிங் செய்ததற்காக கமல்ஹாசனால் கடுமையாக கண்டிக்கபட்டார் அதன் பிறகு அசீம் முற்றிலும் அடங்கி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வெளிப்படுத்தி வருகிறார். அசீம் கடுமையாக நடந்து கொண்ட பொழுது அவருக்கு ஓரளவு குறைவாக மணிகண்டன் நடந்து கொண்டார். மணிகண்டன் கண்டபடி விக்ரமன் உள்ளிட்டவரை திட்டினார் அப்பொழுது விக்ரமன் கேட்ட பொழுது போயா, வாயா என்று பேசி கடுமையாக நடந்து கொண்டார். பின்னர் அவர் இது குறித்து மன்னிப்பு கேட்டாலும் அவரையும் கமல்ஹாசன் அசிமை கண்டிக்கிறேன் உங்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன் என்று கடுமையாக எச்சரித்தார்.

தனலட்சுமியின் எரிச்சல் மூட்டும் கோபம்

தனலட்சுமியின் எரிச்சல் மூட்டும் கோபம்

அதன் பின் மணிகண்டன் தன்னுடைய செயல்பாடுகளை குறைத்துக் கொண்டாலும் அன்பு டீம் கோஷ்டி போல் இந்த சீசனிலும் இருக்கும் அன்பு டீமில் சேர்ந்து கொண்டு செயல்பட்டதை காண முடிந்தது. இடையில் கடந்த வாரம் டாஸ்கில் தனலட்சுமி தன் தரப்பு நியாயத்தை கமல்ஹாசன் பேசியதால் கண்டபடி ஆட ஆரம்பித்தார். பார்ப்பவர்கள் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது என இருந்தார். அதை இந்த வாரம் கமல்ஹாசன் தனலட்சுமிக்கு சுட்டிக்காட்டி உங்கள் கோபம் உங்களை நீடிக்க விடாது அசீம் அமைதியாகிவிட்டார் அந்தப்பணியை நீங்கள் எடுத்து விட்டீர்களா என்று அறிவுரை கூறினார். ஆனாலும் தனலட்சுமி தன்னுடைய செயல்பாட்டை ஓரளவு மட்டுமே குறைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் நடந்து வருகிறார்.

இனிப்புக்கடை டாஸ்க் பெரும் கசப்பாக மாறியது

இனிப்புக்கடை டாஸ்க் பெரும் கசப்பாக மாறியது

இந்நிலையில் இனிப்பு கடை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. கன்வேயர் பெல்ட் மூலம் வரும் பொருட்களை சேகரிக்கும் இந்த போட்டியில் மோதல் ஆங்காங்கே இருந்தது. ஆனாலும் பெரிய அளவில் தாக்குதல் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று தனலட்சுமி ஒரு பக்கத்திலிருந்து கன்வேயர் பெல்ட்டில் ஸ்வீட்டுக்கான கார்டுகளை சேகரித்த பொழுது அவர் பின்னால் இருந்த மணிகண்டன் அவர் அவரை கட்டிப்பிடித்து குறுக்கே காலை கொடுத்து இழுத்து கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த அட்டையை பறித்து சென்றார். இதை உடனடியாக ராம்குமார் தட்டி கேட்டார். நீ செய்வது சரியில்லை என்றார். நான் அப்படி செய்யவில்லை கையில் உள்ள அட்டையை மட்டும் பறித்தேன் என்று மணிகண்டன் நியாயம் சொன்னார்.

அடிப்பதுபோல் பாய்ந்த மணிகண்டன்..பதறிய ஹவுஸ்மேட்ஸ்

அடிப்பதுபோல் பாய்ந்த மணிகண்டன்..பதறிய ஹவுஸ்மேட்ஸ்

ஆனால் தனலட்சுமி கொதித்து போய்விட்டார் என்னை வேண்டுமென்றே பிடித்து தள்ளி விட்டாய் என்று சத்தம் போட்டார். நான் அப்படி செய்யவில்லை உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மணிகண்டன் தனலட்சுமியை அடிப்பது போல் திரும்பத் திரும்ப பாய்ந்தார். ஹவுஸ் மேட்ஸ்கள் குறுக்கே புகுந்து இருவரையும் விலக்கி விட்டனர். தனலட்சுமி கேள்வி கேட்டாலே மணிகண்டன் பதில் சொல்லிக்கொண்டு அடிப்பது போல் பாய்ந்து சென்றதைப் பார்த்து ஹவுஸ் மேட்ஸ்கள் பதறினார். எங்கே ஏதாவது தவறாக நடந்து விடுமோ என்று மணிகண்டனை மடக்கி பிடித்தனர். கடந்த வாரங்களில் அசீம் செய்த அதே வேலையை அத்துமீறலை செய்ததை காண முடிந்தது.

சூடு குறையாத இந்த வாரம்

சூடு குறையாத இந்த வாரம்

இந்த வாரமும் தனலட்சுமி தனக்கு நேர்ந்த கொடுமைக்காக குறும்படம் போட வேண்டும் என்று கேட்பார் என தெரிகிறது. ஆனால் குறும்படம் போடுவதற்கு முன்னாலேயே நெட்டிசன்கள் மணிகண்டன் என்ன மாதிரி வேலையை செய்தார் என்பதை அந்த காட்சியை எடுத்து சமூகவலைதளங்களில் போட்டு கண்டித்து வருகின்றனர். சிலர் தனலட்சுமியையும் கண்டித்து வருகின்றனர். மொத்தத்தில் பிக்பாஸ் இந்த வாரம் சூடு குறையாமல் செல்கிறது. கமல் வந்து அதை சமநிலைப்படுத்துவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X