அசீம் டிஸ்சார்ஜ்... மணிகண்டன் அட்மிட்… பிக் பாஸ் ரசிகர்களிடம் சிக்கிய அடுத்த அமிதாப் மாமா!

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 31 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் இந்த வாரத்துக்கான டீம் டாஸ்க்கில், மணிகண்டன் நடந்துகொள்ளும் விதத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அனல் பறக்கும் பிக் பாஸ் 6

அனல் பறக்கும் பிக் பாஸ் 6

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், முதல் வாரத்தில் இருந்தே பலமான போட்டி நடைபெற்று வருகிறது. ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறிய நிலையில், மற்றவர்களிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது. சில நேரங்களில் போட்டியாளர்கள் குரூப்பிஸத்தோடு நடந்துகொள்ளும் நிலையில், தனிநபர் தாக்குதல்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதில், அசீமின் பெயர் தான் அதிகமாக அடிபட்டது. ஆயிஷா, விக்ரமன் என அசீம் வம்பிழுக்காத ஆட்களே கிடையாது.

அசீம் டிஸ்சார்ஜ்

அசீம் டிஸ்சார்ஜ்

ஒருகட்டத்தில் அசீம் பேச்சும் அவரது நடத்தையும் எல்லை மீறிப் போக, அவரை கமல் கடுமையாக கண்டித்தார். அதன் பின்னர் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் அசீம், இப்போது மகேஸ்வரி, மைனா நந்தினி, தனலட்சுமி ஆகியோருடன் அடிக்கடி வம்பிழுத்து வருகிறார். ஆனால், அசீமையும் மிஞ்சும் அளவிற்கு மணிகண்டன் இப்போது செம்ம ஃபார்மில் வந்துள்ளார். சென்ற வாரம் விக்ரமனிடம் மல்லுக்கட்டிய மணிகண்டனுக்கு, அகம் டிவி வழியே பேசிய கமல் செம்ம டோஸ் விட்டார். அதன்பின்னர் விக்ரமனை அவரால் அதிகம் கார்னர் செய்ய முடியவில்லை. மணிகண்டனின் அட்ராசிட்டியால் அசீம் மீதான விமர்சனங்கள் கொஞ்சம் குறைந்துவிட்டதாகவே தெரிகிறது.

தனலட்சுமியுடன் சண்டை

தனலட்சுமியுடன் சண்டை

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் ஃபேக்டரி டாஸ்க்கில் விக்ரமனின் தேன் அடை அணியில் மணிகண்டன் வேலை பார்க்கிறார். தனலட்சுமி தலமையில் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற டீம் விளையாடி வருகிறது. இதில், இன்றையப் போட்டியில் தனலட்சுமியை தள்ளிவிட்டு அவரிடம் இருந்த பொருளை பறித்துக்கொண்டார் மணிகண்டன். இந்த விவகாரத்தில் மணிகண்டனும் தனலட்சுமியும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். ஒருகட்டத்தில் தனலட்சுமியை அடிக்கப் பாய்ந்தார் மணிகண்டன்.

நெட்டிசன்கள் விளாசல்

நெட்டிசன்கள் விளாசல்

மணிகண்டன் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டது ரசிகர்களிடம் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. அசீமாவது கோபமாக கத்துவதோடு நிறுத்திக் கொண்டார், ஆனால் மணிகண்டன் அடிக்க கை ஓங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் தனலட்சுமியும் மணிகண்டனை ஒருமையில் திட்டியது, பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிவிட்டது. மணிகண்டனின் இந்த செயல்களுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதனால், மணிகண்டனுக்கு இந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X