twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிமிக்கி கம்மலை முந்திய ப்ரியா வாரியரின் கண்ணடி பாடல்

    By Siva
    |

    Recommended Video

    Priya Prakash Varrier: Social Media Queen

    திருவனந்தபுரம்: ஜிமிக்கி கம்மலின் சாதனையை முறியடித்துள்ளது ப்ரியா வாரியர் கண்ணடித்த மாணிக்ய மலராய பாடல் வீடியோ.

    வெளிப்பாடின்டே புஸ்தகம் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் பாடல் மிகவும் பிரபலமானது. மலையாளம் தெரியாதவர்கள் கூட அந்த பாடலை கேட்டு ரசித்தனர், வீடியோ பார்த்தனர்.

    குறிப்பாக ஷெரிலின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் பிரபலமானது.

    கண்ணடி

    கண்ணடி

    ப்ரியா வாரியர் புருவத்தை உயர்த்தி சக மாணவனை பார்த்து கண்ணடித்த மாணிக்ய மலராய பாடல் வீடியோ மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்த வீடியோவே வைரலாக்கிவிட்டதில் தமிழ் ரசிகர்களின் பங்கு அதிகம் என்பதை மறுக்க முடியாது.

    சாதனை

    சாதனை

    யூடியூபில் அதிகம் லைக் செய்யப்பட்ட மலையாள பாடல்கள் வீடியோ பட்டியலில் ஜிமிக்கி கம்மலின் சாதனையை முறியடித்துள்ளது மாணிக்ய மலராய பூவி பாடல் வீடியோ.

    யூடியூப்

    யூடியூப்

    ஒரு அடார் லவ் படத்தில் வரும் மாணிக்ய மலராய பாடலை யூடியூபில் இதுவரை 5.6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோவை 4.6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

    கில்லி

    கில்லி

    யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட மலையாள பாடல் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது ஜிமிக்கி கம்மல். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜிமிக்கி கம்மல் வீடியோவை இதுவரை 67 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

    முந்துமா?

    முந்துமா?

    மாணிக்ய மலராய பாடல் வீடியோவை இதுவரை 35 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதே வேகத்தில் சென்றால் ஜிமிக்கி கம்மலை முந்தி அதிகம் பார்க்கப்பட்ட மலையாள பாடல் வீடியோ என்ற பெருமையை மாணிக்ய மலராய பாடல் பெறும்.

    English summary
    Upon its release, Manikya Malaraya Poovi song from Oru Adaar Love did create a good number of records and now, it has overtaken Jimikki Kammal, which also had created an equally big impact during the time of its release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X