»   »  கேக், மோதிரம், என் புருஷன் போல வருமா: காதலர் தினத்தை ஜமாய்த்த விஜே மணிமேகலை

கேக், மோதிரம், என் புருஷன் போல வருமா: காதலர் தினத்தை ஜமாய்த்த விஜே மணிமேகலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலர் தினத்தை ஜமாய்த்த விஜே மணிமேகலை

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைனுடன் காதலர் தினத்தை அமர்க்களமாக கொண்டாடியுள்ளார்.

காதலர் தினத்தை காதலர்கள் அமோகமாக கொண்டாடினார்கள். ஆள் இல்லாத சிங்கிள்ஸ் தனிமையில் வயித்தெரிச்சலுடன் இருந்தார்கள். டேய், எங்களுக்கு மட்டும் ஆளே கிடைக்க மாட்டேங்குதே என்று சமூக வலைதளங்களில் புலம்பினார்கள்.

இப்படி மகிழ்ச்சியும், புலம்பலுமாக காதலர் தினம் கடந்து சென்றது.

ஹுசைன்

ஹுசைன்

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலை பெற்றோர் ஒத்துக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரான ஹுசைனை அண்மையில் திருமணம் செய்தார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

திருமணத்திற்கு பிறகு வந்த முதல் காதலர் தினத்தன்று ஹுசைன் மணிமேகலையை அசத்திவிட்டார். ஸ்பெஷல் கேக், மோதிரம் என்று மணிமேகலையை மகிழ்ச்சி அடைய வைத்துவிட்டார் ஹுசைன்.

ட்வீட்

காதலர் தினத்தன்று தன் கணவர் வாங்கிக் கொடுத்த மோதிரம் மற்றும் கேக்கை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் மணிமேகலை.

வாழ்த்து

மணிமேகலையின் ட்வீட்டை பார்த்தவர்கள் சூப்பர், அழகான மோதிரம். கண்ணு படப் போகுது முதலில் சுத்திப் போடுங்க மணிமேகலை என்று தெரிவித்துள்ளனர்.

English summary
VJ Manimegalai was so happy on Valentine's day as her husband Hussain gifted a beautiful ring and made her cut a lovely cake on a special day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil