twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் சிகரத்தை புகழ்ந்த சைலன்ட் மணிரத்தினம்

    |

    Recommended Video

    Rajinikanth Speech:கலையுலக அண்ணன் கமலுக்கு வணக்கம்

    சென்னை : மணிரத்னம் கமல்ஹாசனின் ராஜ்கமல் அலுவலகத்தில் நடைப்பெற்ற கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் . அதிகம் நிகழ்ச்சிகள் விழாக்கள் எதிலும் கலந்து கொள்ளாத மணிரத்னம் , பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் இயக்குனர் சிகரத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.

    நிகழ்ச்சியின் போது பேசிய மணிரத்னம் ஆரம்ப காலங்களில் சிவாஜி படங்களை விரும்பி பார்த்தாகவும் , சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ள ஆசைபட்டேன் , சினிமா எடுக்க இயக்குநர் என்று ஒருவர் தேவை , அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் போது தான் இயக்குனர் பாலசந்தர் பற்றி தான் அறிந்ததாகவும் கூறியிருந்தார். மணிரத்னம்.பாலச்சந்தரை தான் நேரில் சந்திக்க வேண்டும் , அவரின் படங்களை தேடி தேடி பாரக்க வேண்டும் என்று தான் மிகவும் ஆசைப்பட்டதாக மணிரத்னம் கூறினார் .

    Manirathinam speech about K. Balachandar on Statue opening ceremony


    மணிரத்னம் இயக்கிய பல படங்களில் பாலச்சந்தர் படங்களின் தாக்கம் இருப்பதை நம்மில் சிலர் கவனித்து இருப்போம். பாலசந்தர் உறவுகள் பற்றியும் அதனுள் இருக்கும் சிக்கல் , அதை சார்ந்த பல விஷயங்கள் பற்றிய பல படங்களை இயக்கியுள்ளார். அதே போல் மணிரத்னமும் தனது படங்களில் வரும் கதாபாத்திரங்களின் இடையே உள்ள உறவு சார்ந்த பிரச்சனைகளை பேசியிருப்பார் .

    அதை தாண்டி பாலசந்தர் குடும்பம் சார்ந்த பிரச்ச்னைகளை பற்றிய படங்களை அதிகம் எடுத்திருக்கிறார் .மணிரத்னம் பாலசந்தர் படங்களில் வருவது போல உறவுகளின் சிக்கல்களை அழுத்தமாக சொல்லமால் மிக மென்மையாக சொல்லிருப்பார்.

    ஃபிரீயா பொய் ஜாவா சுந்தரேசனோட பேசிட்டு வாங்க பாஸ் !!!ஃபிரீயா பொய் ஜாவா சுந்தரேசனோட பேசிட்டு வாங்க பாஸ் !!!

    பாலசந்தர் போல் உயரந்த ஒரு கலைஞரை மணிரத்னம் இதற்கு முன் இப்படி புகழ்ந்தது இல்லை. பல இடங்களில் அவர் பேசியிருந்தாலும் இவ்வளவு விஷயங்களை அவர் இந்த நிகழ்வில் பகிர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

    இயக்குனர் சிகரம் பற்றி சொல்ல வேண்டும் என்றல் நிறைய இருக்கும். திரையுலகில் அவருடன் பணிபுரிந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அவர் ஒரு உந்துதலாகவே இருக்கிறார். அவர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு என்றுமே நீங்கமாட்டார்.

    Read more about: manirathinam balachander
    English summary
    Director Manirathinam to a surprise attended the statue opening ceremony of director K. Balachander which was held today at Alwarpet in Rajkamal Productions office. When Manirathinam spoke about Balachandar he said he is a legend. I learnt so many things from him and many more. Usually he never speaks so much in public meetings. But today his sppech was a surprise to all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X