»   »  30 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் படம் இயக்கும் மணிரத்னம்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் படம் இயக்கும் மணிரத்னம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று ஒரு இயக்குநராக நாடே போற்றும் மணிரத்னம், முதன் முதலி இயக்குநராக அறிமுகமானது கன்னடத்தில்தான். படத்தின் பெயர் பல்லவி அனு பல்லவி. அனில் கபூர் ஹீரோ. இசை இளையராஜா.

இந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் இயக்குநராக ஒரு வலம் வந்த பின், இப்போது மீண்டும் கன்னடத்தில் மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Manirathnam to return Kannada film industry

சமீபத்தில் பெங்களூரில் நடந்த 8வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னத்திடம், மீண்டும் கன்னடப் படம் இயக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, 'நிச்சயம் உள்ளது' என்றார்.

மேலும் கூறுகையில், "தயாரிப்பாளர் எஸ்வி ராஜேந்திரசிங் பாபு கன்னடத்தில் ஒரு படம் இயக்கித் தரக் கேட்டிருக்கிறார். நேரம் கூடி வரும்போது அந்தப் படத்தை இயக்குவேன்," என்றார்.

English summary
Ace director Manirathnam says that he would be directed a Kannada movie soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil