»   »  ராக்கெட், சமாதான புறா, பனிமலை, வெடிகுண்டு... 'மீண்டும் மணிரத்னம்'!

ராக்கெட், சமாதான புறா, பனிமலை, வெடிகுண்டு... 'மீண்டும் மணிரத்னம்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரோஜா படம் மூலம் தீவிரவாதிகளின் வாழ்க்கையை, சூழலை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்தவர் இயக்குனர் மணிரத்னம். அதனாலேயே அந்தப் படம் தமிழ், இந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

தொடர்ந்து பம்பாய், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களும் தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள் தான்.

Manirathnam returns to his favorite terrorism story

சில காலம் தீவிரவாதத்தைப் பற்றி படம் எடுக்காமல் காதல், அரசியல் என அலைபாய்ந்த மணிரத்னம் மீண்டும் தீவிரவாதம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.

அதை நிரூபிக்கும் வகையில் இன்று வெளியிடப்பட்ட அவரது புதுப்படம் காற்று வெளியிடை ஃபர்ஸ்ட் லுக் இருக்கிறது.

மேம்போக்காகப் பார்த்தால் காதல் படமாக மட்டுமே தெரியும் ஃபர்ஸ்ட் லுக்கில் ராக்கெட், சமாதானப் புறா, பனிமலை, வெடிகுண்டு ஆகியவைகளும் தெரிகின்றன. காதலைச் சுற்றி இவ்வளவும் நிகழ்கிறது என்பதற்கான குறியீடுகள் நிறைந்துள்ளன.

காற்று வெளியிடை... படத்தில் கார்த்தி போர் விமான விமானியாக நடிக்கிறார் என்கிறார்கள். காமெடிக்கு ஆர்ஜே.பாலாஜி கார்த்தியுடன் முதல் முறையாக இணைகிறார்.

English summary
It seems like ace director Manirathnam is returning to his favourite terrorist field in his upcoming movie Katru Veliyidai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil