காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடையில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானி ராணுவத்திடமிருந்து இந்திய பைலட் தப்பும் காட்சி கற்பனையல்ல.. நிஜத்தில் நடந்த சம்பவம் என இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.
காற்று வெளியிடையில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானி ராணுவத்திடமிருந்து இந்திய பைலட் தப்பும் காட்சி கற்பனையல்ல.. நிஜத்தில் நடந்த சம்பவம் என இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ கார்த்தியும் அவரது இரு நண்பர்களும் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடமிருந்து தப்பிப்பது போல காட்டப்பட்டுள்ளது. இது சாத்தியமா என ஆன்லைன் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் இது கற்பனையல்ல... உண்மை சம்பவம் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
"கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பர் 10 ம் தேதி இந்திய விமானப் படை வீரர் திலிப் பாருல்கரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. அந்த பேராபத்திலிருந்து மீண்டெழுந்து அடுத்த மூன்று தினங்களில் தனது நண்பர்கள் மல்விந்தர் சிங் க்ரேவல், ஹரிஷ் சிங்ஜி ஆகியோருடன் ராவல்பிண்டி கேம்பிலிருந்து தப்பித்தார். இதனை ஃபெய்த் ஜான்சன் எழுதிய 'ஃபோர் மைல்ஸ் டு கோ' என்ற நூலில் காணலாம். கார்த்தி தப்பிக்கும் காட்சிகள் இந்த நூலிலிருந்து எடுத்தாளப்பட்டவையே.
எனவே காற்று வெளியிடை படத்தின் ராணுவக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விக்கு இனி இடமிருக்காது என நம்புவதாக," இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











