»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை :

இயக்குநர் மணிரத்தினம் நெஞ்சுவலி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

பகல் நிலவு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மணிரத்தினம்.

இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட பல பரபரப்பான படங்களை இயக்கியவர்.

மணிரத்தினத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் நெஞ்சு வலித்துள்ளது.

இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் மணிரத்தினம் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil