For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மனிஷா கொய்ராலா.. இந்தியாவுக்கு எதிராக போட்ட சிங்கிள் ட்விட் வெடித்தது பூகம்பம்

  |

  மும்பை : சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி நேபாளத்தின் புதிய வரைபட எல்லை சர்ச்சை விவகாரத்தில் மூக்ககை நுழைத்து இந்திய மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார் மனிஷா.

  Manisha Koirala Single controversial ட்விட் | Nepal New Map

  இந்திய நடிகையானா மனிஷா கொய்ராலா இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர். இவரின் சொந்த ஊர் நேபாளத்தில் உள்ள காட்மண்டு, இப்போது இவர் இந்தியாவிலுள்ள மும்பையில் வசித்து வருகிறார்.

  இந்திய திரைப்பட துறையில் கிட்ட தட்ட 30 ஆண்டு காலமாக இந்திய மக்களை தனது படங்களின் மூலம் மகிழ்வித்துக்கொண்டிருந்தவர். அதில் நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அதற்காக நிறைய விருதுகளையும் வாங்கியுள்ள இவருக்கு உலக அளவில் இருக்கும் ரசிகர் பட்டாளங்கள் அளவில்லாதவை.

  தெரியாமல் செய்த தப்பு.. ரசிகரிடம் வாங்கி கட்டிக்கொண்ட பிக்பாஸ் நடிகை!தெரியாமல் செய்த தப்பு.. ரசிகரிடம் வாங்கி கட்டிக்கொண்ட பிக்பாஸ் நடிகை!

  சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது

  சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது

  மனிஷா தமிழில் ரஜினி,கமல்,அர்ஜுன்,அரவிந்த் சாமி,தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் மிகப்பெரிய வெற்றிகண்ட படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கடுமையான புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் பின் அதிலிருந்து மீண்டெளுந்துள்ளார்.
  இந்தியா தனது புதிய வரைபடத்தை சென்ற ஆண்டே வெளியிட்டது. அதில் இந்திய, நேபாள எல்லை பகுதியான களப்பணி மற்றும் லிபுலேக் இந்திய பகுதியில் அமைந்துள்ளது.

  இன்று வெளியிடப்பட்டது

  இன்று வெளியிடப்பட்டது

  இந்நிலையில் நேபாள அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவலி இன்று நேபாளத்தின் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டு பிரச்சனைக்குரிய களப்பணி மற்றும் லிபுலேக் பகுதிகளை தந்திரமாக தன்னுடன் இணைத்து கொண்டது. இதனை பற்றி அமைச்சர் பிரதீப் கியாவலி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

  நன்றி நேபாள அமைச்சரே

  நன்றி நேபாள அமைச்சரே

  அமைச்சர் பிரதீப் கியாவலி அவரின் ட்விட்டருக்கு நடிகை மனிஷா கொய்ராலா ரீட்விட் செய்து இருந்தார். அதில் " நம்முடைய சிறிய நாட்டின் கௌரவத்தை காப்பாற்றியதற்கு நன்றி, மூன்று நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் மரியாதையான பேச்சுவார்த்தைகளை நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். என அமைச்சரின் ட்விட்டிற்கு ரீட்விட் செய்துள்ளார்.

  மக்களின் விருப்பம்

  மக்களின் விருப்பம்

  இந்நிலையில் பல வருடங்களாக நேபாள எல்லைப்பகுதிகள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை இந்தியா,நேபாளம் மற்றும் சீனா இடையே இருந்து கொண்டு வருகிறது. அந்த எல்லையில் வாழும் மக்கள் பெரும்பான்மையானோர் இந்தியாவுடனேயே வாழ விரும்புகிறோம் என்று அவர்களின் விருப்பத்தை சொல்லி வருகின்றனர். அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் நேபாள அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இது போன்ற காரியங்களில் செயல்பட்டு வருகிறது என்றும் பலர் கருது தெரிவித்து வருகின்றனர்.

  ஓடிப்போ வெக்கம் கெட்ட மனிஷா

  ஓடிப்போ வெக்கம் கெட்ட மனிஷா

  மனிஷா கொய்ராலாவின் ரீட்விட்டிற்கு இந்திய மக்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அதில் சிலர் நீங்கள் இந்தியாவின் சோற்றை சாப்பிடுகின்றீர்கள். உங்களுக்கு சுயமரியாதை என்ற ஒன்று இருந்தால் இந்தியாவை விட்டு இப்போதே நேபாளத்திற்கு உங்கள் நேபாள உறவுகளுடன் உடனே சென்றுவிடுங்கள். வெக்கம் கெட்ட பெண்மணியே. என தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


  இதுபோன்ற நாடுகளுக்கிடையேயான எல்லை மற்றும் இதர பிரச்சனைகளில் இரு நாட்டு அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசி முடிவெடுக்க வேண்டுமே தவிர ஒரு தனி நபர் இது போன்று பேசி மக்களின் உணர்வுகளிள் அரசியல் செய்யக்கூடாது என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

  English summary
  Manisha Koirala is one of the top most heroine who has done major roles with top level hero's of Indian cinema . she has huge fan following and she has also faced many challenges in life . apart from all of these now she is been criticized by her status updates and twitter answers regarding Nepal map and Indian borders.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X