நடிகை மனிஷா யாதவிற்கு கொரோனா...தனிமைப்படுத்திக் கொண்டார்

மும்பை : தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தார். இருந்தாலும் கவர்ச்சியால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்.

தமிழில் ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த மனிஷா, வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஐட்டம் சாங் ஒவ்றிற்கும் குத்தாட்டம் போட்டிருந்தார்.

Manisha Yadav tests positive for COVID-19

பிறகு 7 ஆண்டுகளாக காதலித்து வந்த பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரை 2017 ல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிக்காமல் இருந்த மனிஷா, கடைசியாக தமிழில் நட்டி நடித்த சண்டிமுனி படத்தில் கடந்த ஆண்டு நடித்தார்.

இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக மனிஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில் அவர், பாசிடிவ். தனிமைப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் விரைவில் குணமடைவேன் னெ மிகவும் பாசிடிவ்வாக உள்ளேன். தனிப்பட்ட முறையில் சோர்வாக, பலவீனமாக உணரவில்லை. சில சமயங்களில் சுவாசப் பிரச்னை மட்டும் உள்ளது. அதனால் பிரச்னை ஏதும் இல்லை. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X