»   »  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மனிதன், சாலையோரம், களம், கண்டேன் காதல் கொண்டேன்!

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மனிதன், சாலையோரம், களம், கண்டேன் காதல் கொண்டேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வெள்ளிக்கிழமை நான்கு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவற்றில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வருகிறது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மனிதன்.

இவற்றுடன் மூன்று ஹாலிவுட் படங்களும் வெளியாகின்றன. ஏற்கெனவே தெறி மற்றும் ஜங்கிள் புக் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முந்தி நிற்கும் சூழலில், இவற்றைத் தாண்டி மனிதன் ஜெயிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


மனிதன்

மனிதன்

இந்திப் படமான 'ஜாலி எல்எல்பி'யின் ரீமேக்கான இந்தப் படத்தை ஐ அகமது இயக்கியுள்ளார். உதயநிதி, ஹன்சிகா, ராதாரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியுள்ளது இந்தப் படம். பிரச்சினைக்குரிய செங்கல்பட்டு ஏரியாவிலும் வெளியாகியுள்ளது.


களம்

களம்

இந்த வாரம் வெளியாகியிருக்கும் இன்னொரு பேய்ப் படம் களம். ராபர்ட் ராஜ் இயக்கத்தில் அம்ஜத், சீனிவாசன், லஷ்மிப்ரியா, பூஜா ஆகியோர் நடித்துள்ளனர். கோலிசோடா மதுசூதன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இப்படத்தை வெளியிடுகிறார்.


சாலையோரம்

சாலையோரம்

பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதர்களைப் பற்றிய படம் சாலையோரம். மூர்த்தி கண்ணன் எழுதி இயக்கியுள்ள இப் படத்தில் ராஜ், ஷெரீனா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். பாண்டியராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழக அரசு வரிவிலக்கும் அளித்துள்ளது இப்படத்துக்கு.


கண்டேன் காதல் கொண்டேன்

கண்டேன் காதல் கொண்டேன்

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம கண்டேன் காதல் கொண்டன். ஆனந்தன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வெங்கட் ஜி சாமி என்பவர் இயக்கியுள்ளார்.குகன், அஸ்வினி நாயகன், நாயகியாக அறிமுகமாகின்றனர்.


ஹாலிவுட்

ஹாலிவுட்

இவை தவிர, மதர்ஸ் டே, தி மேன் ஹு ந்யூ இன்ஃபினிட்டி, 10 க்ளவர்பீல்ட் லேன் ஆகிய ஆங்கிலப் படங்களும் இன்று வெளியாகின்றன.


English summary
Manithan, Kalam, Saalaiyoram and Kandein Kadhal Konden are the straight Tamil movies releassing this Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil