»   »  மனிதன்.... இன்றைய சமுதாயத்திற்கு தேவையான படம்... உதயநிதியைப் பாராட்டும் ரசிகர்கள்

மனிதன்.... இன்றைய சமுதாயத்திற்கு தேவையான படம்... உதயநிதியைப் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் - ஹன்சிகா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் 'மனிதன்'. இந்தியில் ஹிட்டடித்த 'ஜாலி எல்எல்பி' படத்தை தமிழுக்கு ஏற்றவாறு இயக்குநர் அஹமத் ரீமேக்கியிருக்கிறார்.

இதில் உதயநிதியுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா, விவேக், பவர்ஸ்டார் சீனிவாசன், சதீஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.


சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான 'மனிதன்' பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு படத்திற்கும் கிடைத்ததா? பார்க்கலாம்.


உதயநிதி

"மனிதன் இடைவேளை வரை படம் நன்றாக இருக்கிறது. மேலும் முந்தைய படங்களை விட உதயநிதியின் நடிப்பு இதில் மெருகேறியுள்ளது. 2 வது பாதியில் அழுத்தமான வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்று ஸ்ரீ பாராட்டியிருக்கிறார்.


சல்மான்

'குடிபோதையில் சல்மான் பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்ற கதைதான் மனிதன்' என்று படத்தின் கதையைக் கூறியிருக்கிறார் சரவணன்.


சமுதாயத்துக்கு

இன்றைய சமுதாயத்துக்கு தேவையான படம் என்று மனிதனைப் பாராட்டியிருக்கிறார் ஞான்ஸ்.
முதல் பாதி

'படத்தின் முதல் பாதியை விட 2 வது பாதி நன்றாக இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு சூப்பர்' என்று பாராட்டியிருக்கிறார் விதுன்.


முறைப்பொண்ணு

'உதயநிதியின் முறைப்பெண்ணாக பிரியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹன்சிகாவின் நடிப்பு சூப்பர்' என்று செல்வா பாராட்டியிருக்கிறார்.


மொத்தத்தில் 'மனிதன்' நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.English summary
Udhayanidhi Stalin- Hansika Starrer 'Manithan' Today Released Worldwide. Written and Directed by Ahmed -Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil