»   »  மனிதன் வரிவிலக்கு விவகாரம்: விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்

மனிதன் வரிவிலக்கு விவகாரம்: விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'மனிதன்' படத்துக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி, ஹன்சிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மனிதன்'. இப்படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கேட்டு ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்தது.


Manithan Tax Exemption Issue

இந்த படத்தை பார்வையிட 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இப்படத்தைப் பார்த்த குழு அறிக்கையில் 'மனிதன்' என்பது தமிழ் சொல் அல்ல என்று அறிக்கை கொடுத்தது.


அதனடிப்படையில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் பதிலளிக்கக் கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


இதற்கு முன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான '7ம் அறிவு', 'கெத்து' படங்களுக்கும், தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Manithan Tax exemption Issue: High Court Ordered send notices to the State Government.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil