twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடம்பாக்கத்திலிருந்து விரட்டினாலும் மீண்டும் சினிமாவுக்குதான் வருவேன்! - மணிவண்ணன்

    By Shankar
    |

    சென்னை: இந்த கோடம்பாக்கத்தை விட்டு என்னை அடித்து விரட்டினாலும், திரும்ப சினிமாவுக்குள்ளேயே வருவேன். பெட்டிக்கடை நடத்தக்கூட எனக்கு தெரியாது," என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

    டேனியல் பாலாஜி, பானுசந்தர், அனூப், பிரீதி தாஸ் நடித்து, கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ள படம், 'மறுமுகம்.' த்ரில்லர் படமான இதை சஞ்சய் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது.

    பாடல்களை இயக்குநர் மணிவண்ணன் வெளியிட, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.

    Manivannan releases Marumugam audio

    விழாவில், மணிவண்ணன் பேசுகையில், "திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றால் ஆர்ட் படம்தான் எடுப்பார்கள். வேகம் குறைவான படங்களைத்தான் கொடுப்பார்கள் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. 'ஊமை விழிகள்' படம் வந்தபின், அந்த எண்ணம் மாறியது. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைத்தது.

    எங்களால் வர்த்தக ரீதியிலான படங்களையும் எடுக்க முடியும் என்று நிரூபித்தார்கள். இப்போதைய இளைஞர்கள் நிறைய சிந்தனையுடன் வருகிறார்கள். புதிதாக யோசிக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. சினிமா வியாபாரம் விரிவடைந்திருக்கிறது. எப்.எம்.எஸ், சேனல் ரைட்ஸ் என்று வருமான வழி கூடியிருக்கிறது. நான்கு பேர் சேர்ந்து படம் தயாரித்தால், லாபம் சம்பாதிக்கலாம். நஷ்டம் அடைந்தாலும் பங்கு போட்டுக் கொள்ளலாம்.

    டார்ச்சர் பண்ணக் கூடாது...

    சினிமா என்பது கனவு வியாபாரம். நம் கனவும், ரசிகன் கனவும் ஒன்றாக அமைந்தால், படம் வெற்றி பெறும். மாறாக நாம் காணும் கனவை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ரசிகனை 'டார்ச்சர்' பண்ணக்கூடாது.

    'காமெடி' படங்கள் இப்போது ஒரு 'டிரெண்ட்' ஆக இருக்கிறது. அது, விரைவில் மாறிவிடும். காமெடி, ஒரு சுவை. அதுவே சினிமாவாகி விட முடியாது.

    புதிதாக வரும் இளைஞர்களுடன் நானும் பணியாற்றுவேன். அதற்குள் சாக மாட்டேன். எனக்கு சினிமாவை விட்டால், வேறு தொழில் தெரியாது. வீட்டுக்கு முன்னால் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தால் கூட, நஷ்டம் அடைந்து விடுவேன். என்னை துரத்தி அடித்தால் கூட மறுபடியும் சினிமாவுக்குள்ளேயே வருவேன். ஒரு கேட் வழியாக அடித்து விரட்டினால், இன்னொரு கேட் வழியாக உள்ளே வந்து விடுவேன்,'' என்றார்.

    கேஎஸ் ரவிக்குமார் பேச்சு

    விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், ''சினிமா அழிந்து விடும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். ஆனால் அது என்றைக்குமே அழியாது. அழியும் என்று யாராவது சொன்னால், நம்பாதீர்கள். ஒரு காலத்தில் பிலிம் இன்ஸ்டியூட் மட்டும்தான் இருந்தது. இப்போது விஸ்காம், டிகிரி என்று விரிவடைந்திருக்கிறது. அதில் சேருவதற்கு கூட சிபாரிசும், பணமும் தேவைப்படுகிறது.

    அதனால் சினிமா முன்பை விட வளர்ந்திருக்கிறது என்று பொருள். இளைஞர்கள் தைரியமாக சினிமாவுக்கு வரலாம். வெற்றி பெறலாம். சினிமா போன்று ஈர்ப்பான துறை வேறு இல்லை. அரசியல் அதற்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது,'' என்றார்.

    English summary
    Veteran director Manivannan says that he is never quitting cinema, because de dont know anything other than cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X