»   »  மஞ்சள்... இன்னுமொரு 'மதுரக்காரய்ங்க' கதை!

மஞ்சள்... இன்னுமொரு 'மதுரக்காரய்ங்க' கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரையை களமாகக் கொண்டு இன்னும் ஒரு படம் உருவாகி வருகிறது. படத்துக்கு மஞ்சள் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் பயிற்சி பெற்ற திரு நாயகனாகவும், சசி நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை சத்ய சரவணா இயக்கி வருகிறார். செல்வன் நம்பி இசையமைக்கிறார். இதற்கு முன் திட்டக்குடி, மரப்பாச்சி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை கணேஷ், சுரேஷ், பிரியா ஆகிய மூன்று பேர் தயாரித்து வருகிறார்கள். இப்படத்தில் கானா பாலா ஒரு பாடல் எழுதி பாடியிருக்கிறார்.

மதுரைக் களம்

மதுரைக் களம்

இப்படம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் படக்குழுவினர் கூறுகையில், ‘‘இப்படத்தை முழுக்க முழுக்க மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கியிருக்கிறோம். இறந்தவர்களின் இறுதிச் சடங்கை திருவிழா போல் கொண்டாடும் ஊரில் தப்பு அடிப்பவராக நாயகன் நடித்துள்ளார்.

லவ்வுங்கற பேர்ல...

லவ்வுங்கற பேர்ல...

லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களும் சரி, லவ் பக்கமே தலை வச்சு படுத்ததே இல்லைன்னு சொல்றவங்களும் சரி அவங்கள்ல எத்தன பேரு அவங்களோட பையனோ பொண்ணோ லவ் பண்ணுனா லவ்வ புரிஞ்சுக்கிட்டு அவங்கள ஒன்னு சேத்து வச்சு சந்தோசப்பட்றாங்க...

லவ்வுறங்குற வார்த்தையே கேட்டாலே இன்னும் கொஞ்ச நாள்ல கடவுள் கூட கல்லெடுத்து கண்டிப்பா அடிக்க ஆரம்பிச்சிருவான். ஏனா அந்தளவுக்கு ஒரு காலத்துல இதயபூர்வமா நேசிக்கபட்ட லவ், இன்னைக்கி லவ்வுங்குற பேர்ல நாம அடிக்கிற கூத்தாலா தெருவுல ஓட்ற சாக்கடைய விட கேவலமா மாறிடுச்சுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வோரு விதமா வசபாடிக்கிட்டு இருக்கையில...

அன்பின் உச்சம்

அன்பின் உச்சம்

அன்பை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு புழிதிக்காட்டின் அடையாளமாய் அழுக்கு முகங்களோடு முகங்களாக கைகளுக்கு எட்டாதா கற்பனைகளுடன் திரியும் இருவருடைய அன்பின் உச்சத்தை, இன்று சமூகத்தை மிகக் கொடூரமான முறையில் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சனையுடன் கலந்து அழகிய கிராம வாசனையுடன் சொல்வதுதான் இந்த மஞ்சள்," என்றனர்.

எதுக்கு மஞ்சள்?

எதுக்கு மஞ்சள்?

இயக்குநர் சத்ய சரவணாவிடம் தலைப்பு குறித்து கேட்டபோது, "படத்துக்கும் தலைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மங்களகரமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ‘மஞ்சள்' என்று பெயர் சூட்டினோம்," என்றார்.

படத்தை முடித்துவிட்டார்களாம். விரைவில் வெளியிடப் போவதாகத் தெரிவித்தனர்.

English summary
Manjal is a new movie directed by debutant Sathya Saravana with Madurai backdrop.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil