»   »  மிஸ்டர் மமகா... கன்னடத்தில் ரீமேக்காகும் 'மஞ்சப்பை'!

மிஸ்டர் மமகா... கன்னடத்தில் ரீமேக்காகும் 'மஞ்சப்பை'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் 'மஞ்சப்பை'.

அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. இயக்குநருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.


Manjappai goes to Kannada

தற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு 'மிஸ்டர் மமகா' (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவாவே இயக்கியுள்ளார்.


ரவி கௌடா, ஒவியா, ரங்கயனா ரகு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.


இந்தப் படம் தவிர, தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்கும் படத்தையும் இயக்குகிறார் இயக்குநர் ராகவா. முதல் கட்டப் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா வனப் பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது.

English summary
Manjapai, the Vimal - Lakshmi Menon starred super hit movie will be remade in Kannada as Mr Mamaka.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil