Don't Miss!
- News
தடுத்த ஆரிய வந்தேறிகள்.. தமிழர்களை எழுத வைத்து விடியல் தந்த கருணாநிதி பேனா -கார்த்திகேய சிவசேனாபதி
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹனிமூன் பற்றிய கேள்வி.. வெட்கப்பட்ட மஞ்சிமா மோகன்.. கெளதம் கார்த்திக் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் நேற்று சென்னையில் மிகவும் எளிமையான முறையில் திரை பிரபலங்கள் சூழ நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு மஞ்சிமா மோகனும் கெளதம் கார்த்திக்கும் ஹனிமூனுக்கு எங்கே போகப் போறாங்க என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் கொழுந்து விட்டு எரிகிறது.
இந்நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு மஞ்சிமா மோகனும் கெளதம் கார்த்திக்கும் கொடுத்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
விபத்துக்குள்ளாகும் இனியா சென்ற வேன்.. தவிப்பில் கோபி மற்றும் பாக்கியா!

காதல் திருமணம்
நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் திங்கட்கிழமை சென்னையில் தனியார் ரெசார்ட் ஒன்றில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். நடிகை மஞ்சிமா மோகன் கேரளா ஸ்டைல் சேலையில், அதிக நகையெல்லாம் அணிந்து கொள்ளாமல் எளிமையாக இருந்த போட்டோக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து
நவரச நடிகர் மகன் கெளதம் கார்த்திக்கின் திருமணத்தில் முக்கியமான சில சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் எல்லாம் டிரெண்டாகி வருகின்றன. மேலும், பல சினிமா பிரபலங்கள் இந்த நட்சத்திர ஜோடி திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பிரியா பவானி சங்கர் பங்கேற்பு
நடிகை பிரியா பவானி சங்கரும் கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார். சிம்புவின் பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்து வரும் நிலையில், இந்த திருமணத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

ஹனிமூன் எங்கே
இந்த ஆண்டு நயன்தாரா - விக்னேஷ் சிவன், நிக்கி கல்ராணி - ஆதி, ரவீந்தர் - மகாலக்ஷ்மி உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு டிரெண்டாக்கிய நிலையில், கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஹனிமூனுக்கு எங்கே போகின்றனர் என்கிற கேள்வி சமீபத்தில் அவர்களிடமே எழுப்பப்பட்டது.

மஞ்சிமா வெட்கம்
ஹனிமூனுக்கு எங்கே போறீங்க என கேட்டதும் மஞ்சிமா மோகன் அதற்கு பதில் சொல்லாமல் வெட்கப்பட்டார். கெளதம் கார்த்திக் காதலை சொல்லியே 2 நாட்கள் அவரை காக்க வைத்த மஞ்சிமா மோகன் இதை பற்றி மட்டும் வெளிப்படையாக சொல்லிவிடுவாரா? என கமெண்ட்டுகள் பறந்தன.

மாப்பிள்ளை பதில்
உடனடியாக அதற்கு பதில் அளித்த கெளதம் கார்த்திக் இப்போதான் கல்யாணமே ஆகப் போகுது.. அதற்குள் ஹனிமூன் எங்கே என்றால் என்ன சொல்வது, இன்னும் ஏதும் பிளான் பண்ணல.. ஆனால், சீக்கிரம் செல்வோம் என்பது போல சொல்லி இருந்தார். இருவரும் இப்போதைக்கு சென்னையில் தான் உள்ளனர் என்றும் கேரளாவுக்கு முதலில் சென்று விட்டு பின்னர் தான் ஹனிமூன் பற்றிய முடிவுகளை எடுப்பர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பத்து தல இருக்கு
சிம்பு, கெளதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த படத்தின் டப்பிங் பணிகள் மீதம் உள்ளதாகவும் அதை முடித்து விட்டு எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் இருவரும் வெளிநாட்டுக்கு பறப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.