Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை...காதல் பற்றி ஓப்பனாக சொன்ன மஞ்சிமா
சென்னை : கெளதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். மலையாளத்திலும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து 2019 ம் ஆண்டு தேவராட்டம் என்ற படத்தில் நடித்தார். அப்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், காதலித்து வரும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இது பற்றி இந்த ஜோடி இதுவரை வாய் திறக்கவில்லை.
மஞ்சிமா மோகனுடன் காதலை கன்ஃபார்ம் செய்தாரா கெளதம் கார்த்திக்? இன்ஸ்டா போஸ்ட்டுக்கு என்ன அர்த்தம்?

கெளதம் கார்த்திக் வாழ்த்து
இதற்கிடையில் சமீபத்தில் மஞ்சிமாவிற்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட கெளதம் கார்த்திக், உன்னை போன்ற ஒருவவர் என் வாழ்க்கையில் இருப்பது அற்புதமான விஷயமாக நினைக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு தேங்க் யூ ஜிகே என மஞ்சிமாவும் ரிப்ளே செய்திருந்தார். இதனால் இவர்களின் காதல் விவகாரம் உண்மை தான் போல என அனைவரும் நம்ப துவங்கினர்.

எதையும் மறைத்ததில்லை
இந்நிலையில் மலையாள மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்த மஞ்சிமாவிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் 3 வயதில் சினிமாவிற்கு நடிக்க வந்தேன். என் வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் எதையும் நான் மறைத்ததில்லை. எனது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சந்தோஷமான நிகழ்வுகளையும் நான் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளேன். அது சிறியதா, பெரிதா என்பது விஷயமில்லை. ஆனால் நான் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மறைக்க வேண்டிய அவசியமில்லை
என் திருமணம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த தகவலை பதிவிட்டவரே என்னிடம் இது பற்றி கேட்டார். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என அவரிடமே மறுத்து சொல்லி விட்டேன். இருந்தாலும் அவர் இந்த தகவலை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இந்த விஷயம் என்னை மோசமாக பாதித்துள்ளது.

லவ் பண்றீங்களா? இல்லையா?
எனது பெற்றோர் இதனால் எப்படி வேதனைப்படுவார்கள். அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும். நல்லவேளையாக அவர்கள் இதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார் மஞ்சிமா. மஞ்சிமாவின் இந்த பதிலால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். சோஷியல் மீடியாவில் கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமாவும் பேசிக் கொள்வதை பார்த்தால் அவர்கள் காதலிப்பதாக தான் தெரிகிறது. ஆனால் இவர் இப்படி சொல்கிறாரே. எது உண்மை என புரியாமல் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.