Don't Miss!
- News
வானில் தெரிந்த மர்ம சூழல்.. ஸ்பேஸ்ஷிப்பா? ஆண்ட்ரோமெடாவா? குழம்பிய மக்கள்! விஞ்ஞானிகள் தந்த விளக்கம்
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரொம்ப அருவருப்பா இருக்கு.. அபர்ணா பாலமுரளிக்கு நடந்த விஷயம்.. கொதித்தெழுந்த மஞ்சிமா மோகன்!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோவை பார்த்து ஷாக்கான நடிகை மஞ்சிமா மோகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கூட்டத்தில் நடிகைகள் சிக்கினாலே ஏகப்பட்ட சிரமங்களை அவர்கள் சந்திக்க வேண்டிய சூழல் பல நடிகைகளுக்கும் பல முறை நடந்துள்ளது.
நடிகைகளை தவறான இடங்களில் தொடுவது, அத்துமீறுவது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என ரசிகர்கள் போர்வையில் விஷமிகள் எல்லை மீறி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்.. டிரெண்டாகும் வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்!

அபர்ணா பாலமுரளி மீது கை வைத்து
நடிகை அபர்ணா பாலமுரளி கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது புதிய படமான தங்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினருடன் சென்றிருந்தார். அப்போது மேடை ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளியின் தோளில் கை வைக்க முயன்றது அது பிடிக்காமல் அவர் விலகி சென்ற வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

யாருமே கண்டுக்கல
அபர்ணா பாலமுரளிக்கு பிடிக்காமல் அங்கிருந்து விலகி சென்ற நிலையில், அவரது தங்கம் படக்குழுவினர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அந்த மாணவரை கண்டிக்காமல் விட்டது ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இது தவறான செயல் என்றும் அந்த மாணவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.

மஞ்சிமா மோகன் கண்டனம்
இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த நடிகை மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து 'Unbelievable and disgusting!' என நம்பவே முடியல, ரொம்பவே அருவருப்பா இருக்கு என மாணவரின் செயலை வன்மையாக கண்டித்து இருக்கிறார் மஞ்சிமா மோகன்.

ஜனவரி 26 ரிலீஸ்
அபர்ணா பாலமுரளி நடிகர் பிருத்விராஜ் உடன் இணைந்து நடித்த காப்பா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்ததாக அவர் நடித்துள்ள தங்கம் திரைப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்திற்கான ப்ரோமோஷனுக்காகத்தான் சட்டக் கல்லூரி விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள் என்றாலே
நடிகைகள் என்றாலே மாணவர்கள் மத்தியிலும் தவறான கண்ணோட்டம் இருப்பதினல் தான் இப்படி பூ கொடுத்து விட்டு தோளில் அனுமதி இல்லாமல் கை போட்டு விடலாம் என அந்த கல்லூரி மாணவர் நினைத்து விட்டார் என்றும் அவரது தகாத செயலுக்காக தக்க தண்டனை அவர் அனுபவிப்பார் என்றும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.