»   »  வெர்ஜினிட்டி பற்றி பேசியவருக்கு மஞ்சிமா மோகன் பொளேர்

வெர்ஜினிட்டி பற்றி பேசியவருக்கு மஞ்சிமா மோகன் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
டிவிட்டரில் ஒரே நேரத்தில் அனைவரையும் கவர் பண்ண மஞ்சிமா- வீடியோ

சென்னை: கன்னித்தன்மை பற்றி பேசிய நெட்டிசனுக்கு நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார் மஞ்சிமா மோகன்.

நடிகைகள் சனுஷா, அமலா பால் ஆகியோர் பாலியல் தொல்லைக்குள்ளாகினர். இருவரும் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்போரில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து மஞ்சிமா மோகன் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

கருத்து

முன்பை விட பெண்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக நான் என் சகோதரரிடம் தெரிவித்தேன். ஆனால் தற்போது நடந்த சில சம்பவங்களை பார்த்தால் பெப்பர் ஸ்ப்ரே போதாது போன்று. பெண்களை போதைப்பொருளாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று மஞ்சிமா ட்வீட்டினார்.

திருமணம்

மஞ்சிமாவின் ட்வீட்டை பார்த்த ஒருவரோ தயவு செய்து சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். தற்போது கன்னித்தன்மையை காப்பது மிகவும் கடினம் என்று கமெண்ட் போட்டார்.

சுய மரியாதை

நெட்டிசனின் கமெண்ட்டை பார்த்த மஞ்சிமாவோ, திருமணம் தான் தீர்வா? இது எப்பொழுதும் கன்னித்தன்மையை பற்றியது இல்லை சார். சுயமரியாதையும் தான் என்று கூறியுள்ளார்.

பாராட்டு

நெட்டிசன் ஒருவருக்கு நறுக்கென்று பதில் அளித்த மஞ்சிமா மோகனை ரசிகர்கள் பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர். நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actress Manjima Mohan has given a befitting reply to a netizen who talked about virginity. She tweeted that, 'Oh marriage is the solution! Wow!!and it's not always about virginity sir ! There is something called self respect too. 🙏🏻'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil