»   »  காவ்யாவை மணந்த நடிகர் திலீப்: திட்டித் தீர்க்கும் மஞ்சு ரசிகர்கள்

காவ்யாவை மணந்த நடிகர் திலீப்: திட்டித் தீர்க்கும் மஞ்சு ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மஞ்சு வாரியரை ஒதுக்கிவிட்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்ததற்காக ரசிகர்கள் நடிகர் திலீப்பை திட்டி வருகிறார்கள்.

நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு 16 வயதில் மீனாட்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் திலீப்பும், மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

Manju fans unhappy about Dileep's second marriage

திலீப்புக்கும் கணவரை பிரிந்த நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பால் மஞ்சுவை அவர் பிரிந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திலீப் காவ்யா மாதவனை இன்று திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சு வாரியர் மாதிரி ஒரு நல்ல மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு இப்படி இந்த வயதில் காவ்யாவை திருமணம் செய்துள்ளாரே என மஞ்சுவின் ரசிகர்கள் திலீப்பை கழுவிக் கழுவி ஊத்தி வருகிறார்கள்.

விவாகரத்து பெற்ற போதே மஞ்சு திலீப் பற்றி எதுவும் குறை கூறாமல் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Manju Warrier's fans are unhappy about the way her former actor husband Dileep married actress Kavya Madhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil