என்னது வீடியோ சாங்ல வாய்ஸ் வருமா? மஞ்சு வாரியர் போட்ட புது உருட்டு.. அப்போ இது எதுக்கு?
சென்னை: நம்பர் ஒன் மேட்டர் டிரெண்டாகி வந்த நிலையில், அதை மறக்கடிக்க திடீரென நேத்து ராத்திரி துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் அறிவிப்பை திடீரென போனி கபூர் வெளியிட்டார்.
காசேதான் கடவுளடா பாடலில் மஞ்சு வாரியர் பாடி உள்ளார் என்றதுமே ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து அந்த பாடலை கேட்க காத்திருந்தனர்.
ஆனால், கடைசி வரை அவர் ஃபேஸ் ரியாக்ஷன் தான் தெரியுதே தவிர எங்கேயுமே அவரது குரல் மருந்துக்கு கூட கேட்கவில்லை.

தேவையில்லாத ஆணி
அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிளான காசேதான் கடவுளடா பாடலில் மஞ்சு வாரியரின் குரலைத் தேடி ஒரு நீண்ட பயணம் என ரசிகர்கள் பங்கமாக கலாய்க்க ஆரம்பித்தனர். ஜியோமெட்ரி பாக்ஸில் உள்ள டிவைடர் போல இவர் எதுக்கு தேவையில்லாத ஆணி என ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த ட்ரோல் மீம்கள் நொடிப் பொழுதில் மஞ்சு வாரியர் கண்களுக்கும் பட்டு அவரை ரொம்பவே கடுப்பாக்கி உள்ளது.

வீடியோ வெர்ஷன்ல வரும்
ரசிகர்களின் ட்ரோல்களால் கடுப்பான மஞ்சு வாரியர் உடனடியாக ஒரு ட்வீட் போட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்துள்ளார். அதில், துணிவு படத்தின் லிரிக் வீடியோ தான் வந்துள்ளது. வீடியோ பாடலில் நிச்சயம் என் குரல் கேட்கும், இந்த லிரிக் வீடியோவை பார்த்து விட்டு ட்ரோல் செய்தவர்களுக்கு ரொம்பவே நன்றி நல்லா என்ஜாய் பண்ணேன் என ட்வீட் போட்டுள்ளார்.

மஞ்சு வாரியர் உருட்டு
லிரிக் வீடியோவுக்கும் வீடியோ வெர்ஷனுக்கும் நீங்க போட்டுள்ள ட்வீட்டுக்கும் என்ன சம்மந்தம்.. வீடியோ வெர்ஷனில் எக்ஸ்ட்ராவாக உங்க ஆடியோ மட்டும் சேர்ப்பாங்களா? அப்புற எதுக்கு இந்த லிரிக் வீடியோவில் நீங்க பாடுறது போல காட்சிகள் இடம்பெற்றன இந்த உருட்டு நல்லா இருக்கே என நெட்டிசன்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் கலாய்த்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் ஆதரவு
ட்ரோல் பண்ண விஜய் ரசிகர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் மஞ்சு வாரியர். இது அர்ஜென்ட்டாக வெளியான செகண்ட் சிங்கிள் இன்னமும் எக்ஸ்ட்ரா பாடல் மஞ்சு வாரியர் குரலுடன் தியேட்டரில் தெறிக்கவிடும் என அஜித் ரசிகர்கள் துணிவு நாயகிக்கு ஆதரவு கொடுத்து உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

செம அழகு நீங்க
குரலா மஞ்சு முக்கியம்.. ஏகேக்கு பக்கத்துல நீங்க நின்னு ஆடுற அழகே தனி அழகு தான். எங்களுக்கு அது போதும்.. நீங்க ஒன்றும் இந்த ட்ரோல்களை கண்டு கடுப்பாகாதீங்க அசுரன் படத்தில் பண்ணதை விட தரமான சம்பவத்தை துணிவு படத்தில் பண்ணி விடுங்க கதறுறவங்க கதறிட்டுப் போகட்டும் என அஜித் ரசிகர்கள் மஞ்சு வாரியரை கொஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











