For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  44 வயசு மஞ்சு வாரியருக்கு 23 வயசுல இப்படியொரு மகளா.. பார்க்க எப்படி இருக்காங்க தெரியுமா?

  |

  சென்னை: நடிகை மஞ்சு வாரியர் கோலிவுட்டில் அசுரன் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த நிலையில், இந்த பொங்கலுக்கு அஜித் உடன் துணிவு படத்திலும் தூள் கிளப்பி உள்ளார்.

  44 வயதிலும் சினிமா உலகில் நம்பர் நடிகையாக வலம் வருவது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. துணிவு படத்தில் நடிகர் அஜித்துக்கு இணையாக இரண்டாவது ஹீரோவாகவே ஆக்‌ஷன் காட்சிகளில் அதிர வைத்திருந்தார் மஞ்சு வாரியர்.

  மலையாள நடிகர் திலீப் உடன் திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியருக்கு 23 வயதில் மீனாக்‌ஷி எனும் அழகிய மகள் இருக்கிறார் என்பது கோலிவுட் ரசிகர்களை பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

  'துணிவு' திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர் 'துணிவு' திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

  17 வயதில் சினிமா

  17 வயதில் சினிமா

  நடிகை மஞ்சு வாரியர் தனது 17 வயதிலேயே மலையாள படமான சாக்‌ஷ்யம் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். லட்டு உருண்டை போல இருக்கும் மஞ்சு வாரியருக்கு ஆரம்பத்தில் இருந்தே பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. சல்லாபம், தூவல் கொட்டாரம், தில்வாலா ராஜகுமாரன் என ஆரம்பத்தில் அதிகமாக திலீப் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட நடிகருடன் நடித்து வந்தார்.

  திலீப் உடன் திருமணம்

  திலீப் உடன் திருமணம்

  மலையாள நடிகர் திலீப்பை காதலித்த மஞ்சு வாரியர் 1998ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கொஞ்ச வருடங்களிலேயே திலீப்புக்கும் இவருக்கும் இடையே பல பிரச்சனைகள் எழுந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார் மஞ்சு வாரியர்.

  மாறாத இளமை

  மாறாத இளமை

  அசுரன், துணிவு படங்களில் நடிகை மஞ்சு வாரியரை பார்த்த கோலிவுட் ரசிகர்களுக்கு அவருக்கு 44 வயதாகிறதா என்பதே ஷாக்கிங் தகவலாக இருக்கும். அந்த அளவுக்கு இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு மாறாத அழகு கொண்ட மலையாள மங்கை மஞ்சு வாரியர்.

  நடிகை பாலியல் வழக்கு

  நடிகை பாலியல் வழக்கு

  பிரபல தென்னிந்திய நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய காரணமாக இருந்ததாக மஞ்சு வாரியரின் முன்னாள் கணவர் திலீப் கைது செய்யப்பட்டார். அவர் மீது அந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக மஞ்சு வாரியரிடமும் விசாரிக்கப்பட்டது. கணவருக்கு எதிரான சாட்சிகளை மஞ்சு வாரியர் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

  அஜித்துக்கு இணையாக

  அஜித்துக்கு இணையாக

  முன்னணி நடிகர்கள் ஹீரோயின்களுக்கு இணையான ஸ்பேஸ் கொடுப்பது ரொம்பவே பெரிய விஷயமாக சினிமா துறையில் பார்க்கப்படுகிறது. வலிமை படத்தில் ஹூமா குரேஷி எப்படி நடித்து இருந்தாரோ அதே போல துணிவு படத்திலும் மஞ்சு வாரியருக்கு அஜித்துக்கு இணையான ரோல் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  அஜித்துடன் பைக் டூர்

  அஜித்துடன் பைக் டூர்

  நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடித்த நிலையில், நடிகர் அஜித் உடன் பைக் டூர் சென்று வந்தார். மேலும், சமீபத்தில் அஜித்திடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றும் பிரத்யேக போட்டோக்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

  23 வயதில் மகள்

  23 வயதில் மகள்

  ஜோதிகா நடித்த 36 வயதினிலே திரைப்படமே மஞ்சு வாரியர் நடித்த How Old Are You படத்தின் ரீமேக் தான். நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியருக்கு திருமணம் ஆன ஒரே வருடத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தார். மீனாக்‌ஷி என பெயர் வைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது 23 வயதாகிறது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

  அம்மாவை போலவே

  அம்மாவை போலவே

  அம்மா மஞ்சு வாரியர் உடன் இல்லாமல் அப்பா திலீப் உடன் வாழ்ந்து வருகிறார் மீனாக்‌ஷி. அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மாவை போலவே இருக்கிறாரே என துணிவு படத்தின் ரிலீசுக்கு பிறகு அந்த போட்டோக்களை தேடி எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். மகளுக்கு போட்டியாக அம்மாவும் அதே இளமையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Manju Warrier daughter Meenakshi turns 23 years and fans vows both are looks like same after her latest instagram photos trending like a wild fire in social media. Manju Warrier recently appeared in Ajith Kumar's Thunivu movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X