»   »  தாலி பறிபோனபோதும் நாகரீகமாக நடந்து கொண்ட நடிகை மஞ்சு வாரியர்

தாலி பறிபோனபோதும் நாகரீகமாக நடந்து கொண்ட நடிகை மஞ்சு வாரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காவ்யா மாதவன் தனது வாழ்வில் புகுந்தாலும் விவாகரத்து குறித்து அறிக்கை வெளியிட்டபோது நடிகை மஞ்சு வாரியர் யார் மீதும் குறை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலீப்புக்கும் கணவரை பிரிந்த நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதால் அவர் தனது காதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தார் என்று கூறப்பட்டது.

தனது மணவாழ்வு முடிய வேறு ஒரு பெண் காரணம் என தெரிந்தும் மஞ்சு வாரியர் விவாகரத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில் யாரையும் குறைகூறவில்லை. அந்த அறிக்கையின் சில பகுதிகள்,

விவாகரத்து

விவாகரத்து

விவாகரத்து செய்வது எனது தனிப்பட்ட விஷயம். நானும், அவரும் கூட்டாக சேர்ந்து தான் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினோம்.

காரணம்

காரணம்

நானும் திலீப்பேட்டனும்(திலீப்) விவாகரத்து செய்வதற்கான காரணமும் தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் எங்களின் பிரைவசியை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தோழிகள்

தோழிகள்

நான் என் கணவரை பிரிய என் தோழிகளான கீத்து, சம்யுக்தா, பாவனா, பூர்ணிமா மற்றும் ஸ்வேதா மேனன் ஆகியோர் காரணம் என வதந்திகள் பரவுகின்றன. அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

மகள் மீனாட்சி

மகள் மீனாட்சி

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் எல்லாம் நல்லதாகவே நடக்க திலீப்பேட்டனுக்கு வாழ்த்துக்கள். என் மகள் மீனாட்சிக்கு அவளின் தந்தையை எவ்வளவு பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். அவர் அவரிடம் பத்திரமாக இருப்பாள்.

English summary
Actress Manju Warrier didn't accuse any body even during the time of her divorce with actor Dileep.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil