பிருத்விராஜ் படத்தில் இருந்து விலகினாரா மஞ்சுவாரியர்...இதுதான் காரணமா?

சென்னை : நடிகர் பிருத்விராஜ் தற்போது ஷஜி கைலாஷ் இயக்கும் கப்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ப்ருத்விராஜிற்கு ஜோடியாக நடிக்க மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியர் கமிட்டகி இருந்தார்.

படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகளின் தேதிகள் ஒத்து வராததால் படத்தின் ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ப்ருத்விராஜுடன் ஆஷிஃப் அலி, அன்னா பென், திலீஷ் போத்தன், ஜெகதீஷ், நண்டு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

முதலில் இந்த படத்தை முன்னறியப்பு, கார்பன் படங்களை இயக்கிய டைரக்டரும் ஒளிப்பதிவாளருமான வேணு தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் மாற்றப்பட்டு, ஷாஜி கைலாஷிடம் படத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் படக்குழு இந்த படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டது. இது இணையத்தில் செம வைரலானது.

Manju Warrier opts out of Prithviraj movie for Ajiths AK61

இந்த படம் திருவனந்தபுரம் கேங்ஸ்டர் பற்றிய கதை. இந்து கோபன் எழுதிய பிரபல நாவலான ஷண்குமுகியை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்திற்கும் திரைக்கதையை இந்து கோபன் தான் எழுதி உள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் திருவனந்தபுரத்தில் துவங்கி, முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக மஞ்சுவாரியர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது தமிழில் அஜித் நடித்துடன் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தான் கப்பா படத்தில் இருந்து மஞ்சு வாரியர் விலகியதாக சொல்லப்படுகிறது. அவர் விலகியதால் தான் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகையான அபர்ணா பாலமுரளியை நடிக்க வைக்க புக் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏகே 61 படம், தமிழில் மஞ்சுவாரியர் நடிக்கும் இரண்டாவது படம். இதற்கு முன் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் தேசிய விருதும் பெற்றது. மஞ்சு வாரியரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது வங்கிக் கொள்ளை மையமாக வைத்த த்ரில்லர் படமாக ஏகே 61 படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இதனால் இந்த படத்தின் மீதான தான அனைவரின் கவனமும் இருந்து வருகிறது.

அதே சமயம் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் பணிகள் ஏற்கனவே 80 சதவீதம் வரை முடிக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அஜித் ஐரோப்பாவில் இருந்து வந்து விட்டதால் விரைவில் அஜர் புதிய கெட்அப்பிற்கு மாறியதும் இறுதிக்கட்ட ஷுட்டிங் புனேயில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் ஷுட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டு விடும் என சொல்லப்படுவதால் மஞ்சு வாரியர், கப்பா படத்தில் இருந்து விலகுகிறார் என சொல்லப்படுவது நம்பும் படியாக இல்லை என ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X