Don't Miss!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- News
அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Thunivu: தாறுமாறுதான் போங்க.. துணிவு படத்தில் இப்படியொரு விஷயத்தை செய்த மஞ்சு வாரியர்.. வேறமாறி!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்திற்காக அப்படியொரு விஷயத்தை செய்யப் போகிறாராம் நாயகி மஞ்சு வாரியர்.
போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் ஆரம்பிக்க ஆரம்பித்த நடிகர் அஜித், போனி கபூர், ஹெச். வினோத் கூட்டணியில் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்திலும் நடித்துள்ளார்.
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு துணிவு படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஹாட் அப்டேட்டை ஹீரோயின் மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளார்.
அஜித் கோபத்தை கண்டு அரண்டு போன மும்பை நடிகை..ஓவர் ஆட்டம் ஆடியதால் பாதியில் அனுப்பி வைத்த சம்பவம்

அஜித்தின் துணிவு
ஜில்லா vs வீரம் மோதலுக்கு பிறகு நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் நேரடி மோதலை தவிர்த்து வந்தனர். ஆனால், இந்த முறை மோதிப் பார்த்து விட வேண்டியது தான் என இருவருமே முடிவு செய்துள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.

சமமான தியேட்டர்கள்
மொத்தமாக 1000 தியேட்டர்கள் உள்ள நிலையில், வாரிசு படத்துக்கு 500 தியேட்டர்களும், துணிவு படத்துக்கு 500 தியேட்டர்களும் ஒதுக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். அதே சமயம் பெரிய ஸ்க்ரீன் எந்த படத்துக்கு கிடைக்கும் என்றும் நல்ல தியேட்டர் எந்த படத்துக்கு கிடைக்கும் என்பதிலும் பெரிய சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் நிம்மதி
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் நிலையில், எந்தவொரு கவலையும் இல்லாமல் நடிகர் அஜித் நிம்மதியாக உள்ளார் என்றும் துணிவு படத்துக்குத்தான் ஃபர்ஸ்ட் பிரெஃபரன்ஸ் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் வாரிசு படத்தையே ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர் கொடுத்த அப்டேட்
துணிவு படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வரவில்லையே சில்லா சில்லா ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், துணிவு படத்தின் ஹீரோயின் மஞ்சு வாரியர் தற்போது போட்டோவுடன் சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்து அஜித் ரசிகர்களை ஆனந்த கூத்தாட வைத்துள்ளார்.

பாட்டு பாடும் மஞ்சு வாரியர்
துணிவு படத்தின் டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்து விட்டேன் என அறிவித்த மஞ்சு வாரியர் தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் இருக்கும் புதிய போட்டோவை பதிவிட்டு துணிவு படத்தில் சூப்பரான ஒரு பாடலை பாடியுள்ளேன். சீக்கிரமே உங்களுடன் சேர்ந்து நானும் கேட்க ஆர்வமாக இருக்கேன் என பதிவிட்டு அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இஞ்சி இடுப்பழகி
தனுஷின் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் ஏற்கனவே பாடகி சித்ரா உள்ளிட்டோர் முன்னிலையில், இஞ்சி இடுப்பழகி பாடலை பாடி அசத்திய வீடியோவை ரசிகர்கள் அவரது ட்விட்டுக்கு கீழ் பதிவிட்டு உங்க வாய்ஸ் சூப்பர் மேடம், துணிவு படத்தில் தாறுமாறான சம்பவம் காத்திருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.