Mankatha 2: எல்லாம் ரெடி.. அஜித் சொன்ன ஒற்றை வார்த்தை.. டோட்டலா கொலாப்ஸ்
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படம் அஜித்தின் 50வது படம். இந்த படம் பெறும் வெற்றி பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில் மங்காத்தா படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க எல்லா வேலைகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் அஜித் தரப்பில் இருந்து சொன்ன ஒற்றை வார்த்தையால் படத்தின் வேலைகள், அப்படியே கைவிடப்பட்டுள்ளது.
பல நடிகர்களுக்கு 25வது படம் 50வது என எதுவும் எதிர்பார்க்கும் வெற்றியைக் கொடுக்காது. உதாரணத்திற்கு விஜயின் 50வது படமான சுறா விமர்சன ரீதியாகவும் சில காட்சி அமைப்புகள் ரீதியாகவும் மிகப்பெரிய விமர்சனங்களை எதிர் கொண்டு தோல்வியைச் சந்தித்தது. இப்படி இருக்கையில் கடந்த ஆண்டு வெளியான மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படம். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அதே ஆண்டு வெளியான கார்த்தியின் ஜப்பான் படம் தோல்வி படமாக மாறியது.

மங்காத்தா 2: இப்படி இருக்கையில், அஜித்தின் 50வது படமான மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றிப் படம். தமிழ் சினிமா உலகில் எப்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் வந்ததோ அதில் இருந்து அஜித் பிறந்த நாள் வந்தால் அந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யச் சொல்லி ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்து வருகிறார்கள். காரணம் படம் அப்படியாகப் பட்ட சம்பவம் செய்த படம். இன்றைய தேதிக்கு படம் இப்போது ரிலீஸ் ஆகி இருந்தால் ஒரே வாரத்தில் 500 முதல் 600 கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்யும் அளவுக்கு கண்டெண்ட் ஒர்த் கொண்ட படம் மங்காத்தா. படத்தை இன்றைக்கு ரீ ரிலீஸ் செய்தால் கூட எப்படியும் ரி ரிலீஸ் படங்களில் அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும்.

சம்பளம்: இப்படி இருக்கும்போது மங்காத்தா 2 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவை கதை திரைக்கதை எழுதி இயக்கச் சொல்லலாம் என தயாரிப்பாளர் ஒருவர் முடிவு செய்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும் செம குஷியாக இருந்துள்ளார். ஆனால் அஜித் தரப்பில் இருந்து கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடிகள் வரை சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தயாரிப்பாளரோ, சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லி கேட்டுள்ளார். ஆனால் அஜித் தரப்பில் இருந்தோ, சம்பளத்தில் எந்த காம்ப்ரமைஸும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் இந்த படத்தை இப்போது எடுக்க முடியாது போல என்று முடிவெடுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் மங்காத்தா 2 தொடங்கப்படுவதற்கு முன்னரே ஆஃப் ஆகிவிட்டது என்ற பேச்சு திரையுலகில் ஓடிக் கொண்டு உள்ளது. இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











