»   »  "4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா"

"4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மங்காத்தா படம் வெளிவந்து இன்றோடு 4 வருடங்கள் ஆகின்றன, இன்னும் அந்தத் தாக்கம் அஜீத் ரசிகர்களிடையே சற்றும் குறையவில்லை.

படம் வெளிவந்த அன்று கொண்டாடியதை விட இன்று அதிகமாக மங்காத்தாவை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள். அஜீத் முதன்முதலில் சால்ட் - பெப்பர் லுக்கில் நடித்தது, படத்தில் ஆண்டி ஹீரோவாக தோன்றியது, வளரும் நடிகர்களுடன் இணைந்து நடித்தது.

மற்றும் தன் இமேஜைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் நடித்தது, யுவனின் அதிரடியான இசை போன்ற காரணங்களால் பிளாக்பஸ்டர் என்ற அந்தஸ்தை அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா பெற்றது.

படத்தில் வரும் தெறிக்கும் வசனங்களுக்காகவே மீண்டும் மீண்டும் மங்கத்தாவை பார்த்து படத்தை பிளாக்பஸ்டராக்கிய ரசிகர்கள் இன்று #4yearsofblockbustermankatha என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

மங்காத்தா படத்தைப் பிடிக்க இதுதான் காரணம் என்று ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லி படத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில், ரசிகர்களின் ட்வீட்டுகளில் இருந்து ஒருசிலவற்றை இங்கே நாம் பார்க்கலாம்.

வில்லன்னு 1000 பேர் வரலாம்

வில்லன்னு 1000 பேர் வரலாம் ஆனா தல மாதிரி ஒரு வில்லன் வருவாரா, அதுக்கெல்லாம் தவம் கிடக்கணும் பாஸ் என்று மங்காத்தா படத்தில் தன்னை ஈர்த்த அஜீத்தின் வில்லத்தனத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார் தல வெறியன்.

வில்லன்னா நாங்கதான்

ஹீரோ வில்லன் ரெண்டுமே நாங்கதான் என்று என்று மங்காத்தா படத்தில் தன்னை ஈர்த்த அஜீத்தின் நடிப்பைப் பாராட்டியிருக்கிறார் புலி சாதம்.

4 வருஷம் இல்ல 40 வருஷம்

4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா...என்று கூறியிருக்கிறார் கூட்டத்துல ஒருத்தன்.

கிங் மேக்கர்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்ற வரிகளைப் பாராட்டி தி கிங் மேக்கர் என்று அஜித்தைப் புகழ்ந்திருக்கிறார் வல்லவன் வம்சம்.

இதைப் போன்ற மேலும் பல ட்வீட்டுகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது #4yearsofblockbustermankatha...

English summary
Mankatha Movie Entered in 4th Year, Now Ajith Fans Celebrating This Day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil