For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தற்கொலை எண்ணம் என்னையும் வாட்டியது.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்.. பரபரப்பில் பாலிவுட்!

  |

  மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சோன்சிரியா படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், தானும் தற்கொலை செய்துக் கொண்டு இறந்திருப்பேன் எனக் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

  மன அழுத்தம், பிபி, சுகர் குறையும்.. டிப்ஸ் சொல்கிறார் டாக்டர் தீபா

  பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், மற்றொரு பிரபல நடிகரான மனோஜ் பாஜ்பாய், சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படியொரு வார்த்தை கூறியுள்ளார்.

  இந்த மூஞ்சியெல்லாம் சினிமாவுக்கு லாயக்கில்லை என்றும் தன்னை பாலிவுட் நிராகரித்த சம்பவங்களையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

  'குட்பை மும்பை..' சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா..? நடிகர் சுஷாந்த் சிங் ஹீரோயின் புதிர் போஸ்ட்! 'குட்பை மும்பை..' சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா..? நடிகர் சுஷாந்த் சிங் ஹீரோயின் புதிர் போஸ்ட்!

  சிறந்த நடிகர்

  சிறந்த நடிகர்

  1994ம் ஆண்டு வெளியான த்ரோகால் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் மனோஜ் பாஜ்பாய். 1998ம் ஆண்டு சத்யா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பாலிவுட்டின் சிறந்த நடிகராக வலம் வரும் மனோஜ் பாஜ்பாய், கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான சோன்சிரியா படத்தில் நடித்திருந்தார்.

  9 வயதில்

  9 வயதில்

  பீகாரில் உள்ள பெல்வா எனும் குக்கிராமத்தில் பிறந்த மனோஜ் பாஜ்பாய், தனது 9வது வயதிலேயே சினிமா மீது ஆர்வம் கொண்டு, நடிகனாக போகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்காமல், அவரை படிக்க வைத்தனர். பின்னர் டெல்லிக்கு குடிபெயர்ந்த அவர், தனது கல்லூரி படிப்பை அங்கு முடித்தார்.

  4 முறை நிராகரிப்பு

  4 முறை நிராகரிப்பு

  நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் சேர்ந்து படிக்க விரும்பிய மனோஜ் பாஜ்பாயின் விண்ணப்பம் தொடர்ந்து 4 முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரி படிப்பை படித்துக் கொண்டே, தியேட்டர்களுக்கு சென்று நடிக்கவும் நடிப்பை கற்கவும் தொடங்கியுள்ளார். த்ரோகால் படத்தில் வெறும் ஒரு நிமிட ரோலில் நடித்த மனோஜ் பாய், பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளார்.

  போட்டோவை கிழித்து தூக்கிப் போட்டனர்

  போட்டோவை கிழித்து தூக்கிப் போட்டனர்

  சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி, பாலிவுட்டில் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியதாகவும், ஒரு கம்பெனியில் துணை இயக்குநர் ஒருவர், இந்த மூஞ்சி எல்லாம் சினிமாவுக்கு செட் ஆகாது என தனது கண் முன்னே தனது போட்டோவை கிழித்து தூக்கிப் போட்ட சம்பவம் தனக்கு ஆறாத துயரத்தை கொடுத்தது எனக் கூறியுள்ளார்.

  தற்கொலை எண்ணம்

  தற்கொலை எண்ணம்

  கனவு நனவாகாது, லட்சியம் நிறைவேறாது என விரக்தி அடைந்தேன். தொடர் அவமதிப்பால், தற்கொலை செய்து கொள்ளவும் முடிவு செய்தேன். நல்ல வேளையாக என் அறை நண்பர்கள் என்னை தடுத்து விட்டனர். மேலும், அந்த இரவு முழுவதும், விழித்து இருந்து என்னை காப்பாற்றினர். இல்லை என்றால் எப்போவோ நானும் போய் சேர்ந்திருப்பேன் என தனக்கு வந்த தற்கொலை எண்ணம் குறித்து பேசியுள்ளார் மனோஜ் பாஜ்பாய்.

  இது தீர்வல்ல

  இது தீர்வல்ல

  வாழ்க்கை என்பதே போராட்டம் நிறைந்த ஒன்று தான். எப்போது நம்மை வீழ்த்தலாம், என பலரும் காத்துக் கிடப்பார்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற இந்த வாழ்க்கையை இருக்கும் வரை வாழ்ந்துவிட வேண்டும். ஏமாற்றங்களுக்கு தற்கொலை ஒரு போதும் தீர்வாகாது. என் முடிவை நினைத்து நானே பல முறை வெட்கப்பட்டிருக்கிறேன் என மேலும், தனது பேட்டியில் கூறியுள்ளார் மனோஜ் பாஜ்பாய்.

  சமந்தாவுடன்

  சமந்தாவுடன்

  மனோஜ் பாஜ்பாயின் தி ஃபேமிலி மேன் சீசன் ஒன்று வெப்சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசனும் ரெடியாகி உள்ளது. நடிகை சமந்தா, தி ஃபேமிலி மேன் 2வது பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வெப்சீரிஸ் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். லாக்டவுனுக்கு முன்னதாக ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் நடைபெற்று விரைவில் இந்த வெப்சீரிஸ் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Recently, actor Manoj Bajpayee opened up about how he was on the verge of committing suicide during his struggling days.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X