twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "கண்ணம்மா.. பேபி அம்மா.. சின்னக் கவுண்டர் ஆத்தா"... மறக்க முடியாத மனோரமாவின் காவியங்கள்!

    By Manjula
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை மனோரமா நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவரது உயிரை பறித்து விட்டது.

    4 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை பெற்றவர், தனது வாழ்நாளில் சுமார் 1500 படங்களுக்கும் மேல் நடித்துப் புகழ்பெற்றவர் மனோரமா.

    திரையுலகில் உச்சம் தொட்ட ஆச்சியின் படங்களில் அவரது மறக்க முடியாத கதாபாத்திரங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

    தில்லானா மோகனாம்பாள் - ஜில் ஜில் ரமாமணி

    தில்லானா மோகனாம்பாள் - ஜில் ஜில் ரமாமணி

    தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா நடித்த ஜில் ஜில் ரமாமணி வேடம் இன்றளவும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப்பேரொளி பத்மினி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் அவர்களை விடவும் அதிகமாக ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது மனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்சாரம் அது மின்சாரம் - கண்ணம்மா

    சம்சாரம் அது மின்சாரம் - கண்ணம்மா

    குடும்ப சித்திரமாக வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மா என்ற வேலைக்காரியாய் நடித்து அசத்தியிருப்பார். விசு, ரகுவரன், லட்சுமி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் மனோரமா பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க பாடுபடுவார். இந்தப் படத்தில் இவர் பேசிய "கம்முன்னு கிட" வசனம் மிகவும் புகழ்பெற்றது.

    நடிகன் - பேபி அம்மா

    நடிகன் - பேபி அம்மா

    நடிகன் படத்தில் மனோரமா நடித்த பேபி அம்மா கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக திகழ்கிறது. சத்யராஜ், குஷ்பூ இருவருடனும் இணைந்து மனோரமா நடித்த நடிகன் திரைப்படம், மனோரமாவிற்கு மிகவும் பிடித்த ஒரு வேடம் என்று சமீபத்திய பேட்டியில் கூட அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் 2 பெண்களின் கார்டியனாக நடித்த மனோரமா நகைச்சுவையில் பின்னியிருப்பார்.

    சின்னக் கவுண்டர் - ஆத்தா

    சின்னக் கவுண்டர் - ஆத்தா

    சின்னக்கவுண்டர் படத்தில் ஆத்தாக் கிழவியாக நடித்து அசத்தியிருந்தார் மனோரமா. விஜயகாந்தின் அம்மாவாக இந்தப் படத்தில் நடித்த மனோரமா தெற்றுப் பல்கள் வைத்து நடித்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவரின் சிரிப்பு குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகத் திகழ்ந்தது.
    சின்னக்கவுண்டர் படமும் மனோரமாவிற்கு மிகவும் பிடித்த படமென்பது குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு வாசல்

    கிழக்கு வாசல்

    தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. நிறைய படங்களில் அவர் நடித்திருந்தாலும் கிழக்கு வாசல் திரைப்படம் அவரின் அம்மா வேடத்தை நன்றாக பிரதிபலித்தது. மகன் கார்த்திக்காக குஷ்பூவை பெண் கேட்டு செல்லும் காட்சி மற்றும் குஷ்பூவின் வீட்டில் அவர் படும் அவமானங்கள் ஆகியவை ரசிகர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது.

    சின்னத் தம்பி

    சின்னத் தம்பி

    சின்னத் தம்பி படத்தில் பிரபுவின் அம்மாவாக நடிப்பில் கலக்கியிருப்பார்.இந்தப் படத்தில் மனோரமா ஏற்று நடித்த கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான படங்களில் மனோரமா கண்ணம்மா என்னும் பெயரிலேயே நடித்திருக்கிறார். இதைத்தவிர அண்ணாமலை, மே மாதம், பாட்டி சொல்லைத் தட்டாதே, சிங்காரவேலன், அருணாசலம், மறுமலர்ச்சி, புதிய பாதை, அபூர்வ சகோதரர்கள், மன்னன் போன்ற திரைப்படங்களும் ஆச்சியின் நடிப்பில் குறிப்பிடத் தகுந்த படங்கள் ஆகும்.

    English summary
    Veteran film actress Manorama died of cardiac late in the night on Saturday in Chennai. Fondly called Aachi, Manorama has acted in more than 1,200 films and 1,000 plays. She set a Guinness record when she completed 1,000 films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X