»   »  வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி பாடலால் ஒரே இரவில் பெரிய பாடகியான மனோரமா

வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி பாடலால் ஒரே இரவில் பெரிய பாடகியான மனோரமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனோரமா பொம்மலாட்டம் என்ற படத்திற்காக பாடிய வா வாத்தியாரே வூட்டாண்ட பாடலால் அவர் ஒரே நாளில் பிரபல பாடிகியாகிவிட்டார்.

மனோரமா 7 வயதிலேயே தியாகராஜ பாகவதரின் பாடல்களை அழகாக பாடி வந்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1958ம் ஆண்டு ரிலீஸான மாலையிட்ட மங்கை படம் மூலம் சினிமா நடிகையானார்.

திரைத்துறையில் அவர் நடிப்பை தவிர தனது குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

போகாதே போகாதே

போகாதே போகாதே

ரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் எழுதிய போகாதே போகாதே என் கணவா என்ற பாடலை பாடினார் மனோரமா. அது தான் பெரிய திரையில் அவர் பாடிய முதல் பாடல்.

வா வாத்தியாரே

பொம்மலாட்டம் படத்தில் மனோரமா சென்னை பாஷையில் வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி நான் விட மாட்டேன் என்ற பாடலை பாடி நடித்தார். அந்த ஒரே பாடலில் அவர் மிகவும் பிரபலமான பாடகி ஆனார்.

பாட்டி சொல்லை தட்டாதே

பாட்டி சொல்லை தட்டாதே

பாண்டியராஜன், ஊர்வசி ஜோடியாக நடித்த படத்தில் ஹீரோவின் பாட்டியாக நடித்திருந்தார் மனோரமா. அந்த படத்தில் அவர் பாடிய டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பாடல் மிகவும் பிரபலம்.

மெட்ராஸை

மெட்ராஸை

மே மாதம் படத்தில் மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன் பாட்டுக்கும் குரல் கொடுத்திருந்தார் மனோரமா. அவர் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

English summary
Manorama became a star singer after lending her voice for Vaa Vaathiyare song for the movie Bommalattam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil