»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெண் உதவியாளரை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக வழக்குத் தொடரப்பட்டிருந்த நடிகர் மன்சூர்அலிகானுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நடிகர் மன்சூர் அலிகானிடம் உதவியாளராக இருந்தவர் சினேகா சர்மா. மார்வாடிப் பெண்ணான இவர் மன்சூரிடம்உதவியாளராக சேர்ந்தபோது அவர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

1996-ம் ஆண்டு ஒருமுறை, பட டிஸ்ஷன் சம்பந்தமாக ஒரு ஹோட்டலுக்கு சினேகாவையும் அழைத்துச் சென்றார்.அங்கு சென்ற பின் சினேகாவுக்கு மயக்க மருந்து கலந்த பழரச பானத்தைக் கொடுத்துள்ளார்.பின்னர் அவர்மயங்கியவுடன் 2 முறை மன்சூர், சினேகாவைக் கற்பழித்துள்ளார்.

இதுகுறித்து 1998-ம் ஆண்டுதான் சினேகா போலிஸில் புகார் செய்தார். கோடம்பாக்கம் போலிஸில் அவர் புகார்கொடுத்தார். தனது புகாரில், கற்பழித்த பின் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக மன்சூர் அலிகான்வாக்குறுதி கொடுத்தார். எனக்குக் குழந்தை பிறந்தபோது, அதன் தந்தை பெயராக தன் பெயரையே கொடுத்தார்.ஆனால் கொடுத்த வாக்குறுதிப் படி அவர் நடந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் சினேகா.

மன்சூர் அலிகான் மீது கோடம்பாக்கம் போலீசார், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மன்சூர்அலிகானிடம் ஹைதராபாத்தில் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. வழக்கு சென்னை தன்மை செஷன்ஸ்கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பை கேட்பதற்காக சினேகா தனது 2 வயது குழந்தையுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். நீதிபதி அசோக் குமார்தனது தீர்ப்பில் கூறியதாவது:

நிஜ வாழ்க்கையிலும் ஒரு வில்லன் போல நடந்து கொண்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அவர் மீதானகுற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளன. சினேகாவை கற்பழித்த குற்றத்திற்காக அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் ஒன்றரைஆண்டுகள் அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

மேலும், சினேகாவை மோசடி செய்ததற்காக 6 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம்விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால், மேலும் ஒன்றரை மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இரு தண்டனைகளையும் மொத்தமாக 7 ஆண்டுகள், ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்.

மிரட்டல் விடுத்ததாக மன்சூர் அலிகான் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்படுகிறார்.மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையிலிருந்து ரூ. 3 லட்சத்தை சினேகாவுக்கும், அவரதுகுழந்தைக்கும் தர வேண்டும் என்றார் நீதிபதி.

தீர்ப்பு வெளியான உடனேயே மன்சூர் அலிகான் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.வெளியே குழுமியிருந்த செய்தியாளர்கள் அவரை அணுகியபோது, இது பொய்யான வழக்கு. உலகம் உருண்டைஎன்பது எவ்வளவு உண்மையோ அதேபோல நான் நிரபராதி என்பதும் உண்மை. என்னை பழிவாங்கியிருக்கிறார்கள். கட்டாயம் அப்பீல் செய்து வெளியே வருவேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil