»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விஜயகாந்த்தின் வேண்டுகோளை ஏற்று நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை நடிகர் மன்சூர் அலிகான்ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பதவிகள், பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்றுவிஜயகாந்த் நேற்று முன் தினம் கூறியிருந்தார். திமுக நடிகர்களை குறி வைத்தே அவர் பேசியதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக விவாதிப்பதற்காக நடிகர் சங்கத்தில் வரும் 30ம் தேதி அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. அதில்காரசாரமாக மோதல் நடக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இப்போது அதிமுகவில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் தனது செயற்குழு உறுப்பினர் பதவியைராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

நெய்வேலியில் தாங்களும், பாரதிராஜா அவர்களும் இணைந்து நடத்திய வெற்றிகரமான காவிரி நீர்ப்போராட்டத்தை குறிப்பிட்ட கட்சியை (திமுக) சேர்ந்தவர்கள் திட்டமிட்டு, அரசியல் சதி செய்து களங்கப்படுத்திவிட்டார்கள்.

ஆடுகளை முட்ட வைத்து ரத்தம் குடித்த ஒநாய் போல அவர்கள் நடந்து கொண்டு விட்டார்கள். நடிகர்களையும்பிரித்து விட்டார்கள்.

பாரதிராஜாவின் அப்பழுக்கற்ற சேவையை கட்சி சாயம் பூசி விட்டார்கள். அறிமுகப்படுத்தியவர்களையே சிலர்(ராதிகா) அசிங்கமாக பேசியதும் மனதைப் புண்படுத்தி விட்டது.

உங்களின் உன்னத சேவை எனக்குப் புரிகிறது. எனவே உங்களது வேண்டுகோளை ஏற்று எனது செயற்குழுஉறுப்பினர் பதவியை துறக்கிறேன். என்றென்றும் நடிகர் சங்க உறுப்பினராக செயல்படுவேன் என்று அக்கடிதத்தில்கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.

நடிகர் சங்கப் பொறுப்பில் தற்போது திமுகவைச் சேர்ந்த சரத்குமார் (பொதுச் செயலாளர்), நெப்போலியன்(துணைத் தலைவர்), சந்திரசேகர், தியாகு (இருவரும் செயற்குழு உறுப்பினர்கள்) மற்றும் அதிமுகவைச் சேர்ந்தஎஸ்.எஸ். சந்திரன் (துணைத் தலைவர்) ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் இருப்பவர்கள் நடிகர் சங்கத்தில் பதவிகளில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டால் அதிகம்பாதிக்கப்படப் போவது திமுக தான்.

இதனால் விஜய்காந்த்தை அதிமுக தான் தூண்டிவிட்டு இந்த நடவடிக்கை எடுக்க வைக்கிறதோ என்ற சந்தேகம்ஏற்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil