»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கற்பழிப்பு வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான், தனக்குவிதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.

மன்சூர் அலிகானின் பெண் உதவியாளர் சினேகா, தன்னை மன்சூர் அலிகான் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டதாக கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கில் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுசிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தற்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனுத்தாக்கல் செய்துள்ளார் மன்சூர் அலிகான்.

தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரும் மனு ஒன்றையும் மன்சூர் அலிகான் தாக்கல்செய்துள்ளார்.

Please Wait while comments are loading...