»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனக்கு தண்டனை அளிக்கபட்டதால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக, கற்பழிப்புவழக்கில் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

என்னிடம் உதவியாளராக இருந்த சிநேகா சர்மாவை நான் கற்பழிக்கவில்லை. அவர் ஏற்கனவே திருமணமானவர்.அவருக்கு பிங்கி என்ற 8 வயது குழந்தையும் இருக்கிறது.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் ஜெயலலிதா எனக்கு சீட் தருவதாக கூறியிருந்தார். என்மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் நான் தேர்தலில் போட்டியிட முடியாமல்போய் விட்டது.

எனக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் நான் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன்.

ஆனால் என் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து என் முடிவை மாற்றிக் கொண்டேன்.என் மனைவியின் நகைகளை விற்றுத்தான் நான் ஜாமீனில் வெளி வந்துள்ளேன் என கூறினார் மன்சூர் அலிகான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil