»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் ஒரு சாமியாருக்காக 30 மணி நேரம் செலவிட்ட நடிகர் ரஜினிகாந்த், காவிரி நீருக்காக 3 மணி நேரம் செலவிடக் கூடாதா என்று நடிகர்மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மன்சூர் வெளிட்ட அறிக்கை:

கர்நாடகாவில் தலைக் காவிரியில் தோன்றும் காவிரி நதி, தமிழகத்தில் பவானி, பாலாறு, கல்லணை வழியாககொள்ளிடம், தஞ்சாவூர், கீழணை என்று பல பிரிவுகளாகப் பிரிந்து காவிரிப்பூம்பட்டினம், காரைக்கால்,நாகப்பட்டினம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இது இயற்கையின் நியதி. பூமிக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். உலக நதி நீர்ப் பங்கீட்டின் படி இதை யாரும்தடுக்கக் கூடாது.

ஆனால் கர்நாடக அரசு அப்போதும், இப்போதும், எப்போதும் செய்து வரும் பச்சைத் துரோகம் இது.

அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் குதிப்பது, தர்ணா செய்வது, ரயில் மறியல் செய்வது,தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை உடைப்பது, தீ வைப்பது என்று வன்முறைச் சம்பவங்களில்ஈடுபடுகின்றனர்.

மேலும் பெங்களூரில் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின்சொத்துக்களைச் சூறையாடுவது, வேட்டையாடுவது என்று வெறிபிடித்தும் அலைகின்றனர்.

நியாயப்படி, தர்மப்படி தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு தண்ணீர் வந்து சேர வேண்டியவழிகளில் கட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட சில அணைகள் களையப்பட வேண்டும்.

உப்பிட்ட தமிழர்களையும் தமிழ் மண்ணையும் மறக்க மாட்டேன் என்று சொன்ன ரஜினி, அமெரிக்காவில் ஒருசாமியாருக்காக 30 மணி நேரம் செலவிடும் போது, தமிழகத்தின் அடிப்படை ஜீவாதார உரிமைக்காக குரல்கொடுக்கக் கூடாதா?

அவர் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீருக்காக ஒரு மூன்று மணி நேரமாவது ஒதுக்கக் கூடாதா?

இங்கே (தமிழகத்தில்) கோடிக் கோடியாக சம்பாதித்து கர்நாடகாவில் ஆலைகள், சோலைகள், கல்யாணமண்டபங்கள் என சொத்து சேர்க்கும் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்-நடிகைகள், பாவப்பட்ட தமிழகத்திற்காககர்நாடகாவில இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தி கோரிக்கை விடுக்கக் கூடாதா என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் மன்சூர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil