»   »  பம்பாய்க்கு போய் ஆடியோ வெளியிடுவாரு, பொதுக்குழுவுக்கு வரமாட்டாரு: மன்சூர்அலி கான்

பம்பாய்க்கு போய் ஆடியோ வெளியிடுவாரு, பொதுக்குழுவுக்கு வரமாட்டாரு: மன்சூர்அலி கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பம்பாய்க்கு போய் ஆடியோ வெளியிடுவாரு, சங்க கூட்டத்திற்கு வரமாட்டாரு என்று சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு, தடியடி, கைது என்று பல பிரச்சனைகள் நடந்தது. கூட்டத்திற்கு ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் வரவில்லை. ஆனால் கமல் ஸ்கைப் மூலம் பேசினார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் மன்சூர் அலி கான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கமல், ரஜினி

கமல், ரஜினி

வயசாலிக பாவம். ஒருத்தர் ஸ்கைப்பில் பேசிட்டாரு, இன்னொருத்தரு பேச முடியாமல் இருக்காரு. பம்பாய்க்கு எல்லாம் போய் அவர் படத்தின் ஆடியோவை வெளியிடுவாரு ஆனால் பொதுக்குழுவுக்கு வரமாட்டாரு.

நடிகன்

நடிகன்

அவர் ஏன் வரவில்லை என என்னை கேட்டால். நான் சாதாரண நடிகன் அவ்வளவு தான். இந்த துறை தான் எனக்கு சாப்பாடு போட்டுச்சு. அதனால் நான் நாணயமாக இருக்கேன்.

பெரியாளு

பெரியாளு

அவங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க பெரியாளு, உடம்புக்கு முடியாமல் இருக்கலாம். வேறென்ன பேசட்டும். யார் செய்தாலும் தவறு தவறு தான். மோடி செய்தாலும் தவறு தான்.

மோடி

மோடி

பொண்டாட்டியை மறைச்சு வச்சிட்டு பதவிக்கு வந்தவரு மோடி. மன்சூர் அலி கான் வேட்புமனுவில் பொண்டாட்டி இல்லைன்னு சொல்லியிருந்தால் விட்டிருப்பார்களா? தூக்கி 2 வருஷம் உள்ள வச்சிருப்பாங்க. ஜெயிச்சா வெற்றி செல்லாதுன்னு சொல்லிருப்பாங்க. அப்படிப்பட்டவரால் பொதுமக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

மார்ச் 31ம் தேதி இயர் என்ட், அதனால் அதுவரை பழைய நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அப்படி செய்தால் தற்போது காத்து வாங்கும் தியேட்டர்களில் கூட்டம் இருக்கும். தயாரிப்பாளர்கள் என்ன செய்றாங்கன்னு தெரியலை. நோட்டை மாத்திக்கிட்டு இருக்காங்களோ என்னவோ.

English summary
Actor Mansoor Ali Khan blasted super star Rajinikanth for skipping Nadigar Sangam's annual general body meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil