»   »  அஜீத் தம்பி, தமிழகத்தில் படம் ஓட திருப்பதிக்கு பதில் முருகன் கோவிலுக்கு வரப்படாதா?: மன்சூர் அலிகான்

அஜீத் தம்பி, தமிழகத்தில் படம் ஓட திருப்பதிக்கு பதில் முருகன் கோவிலுக்கு வரப்படாதா?: மன்சூர் அலிகான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படம் ரிலீஸாகியுள்ள நிலையில் அஜீத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அஜீத்தின் விவேகம் படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் கொடூர மொக்கை என்று சிலர் கூறி வருகிறார்கள். அஜீத் ரசிகர்களோ படம் சூப்பர் என்கிறார்கள்.

Mansoor Ali Khan writes a letter to Ajith

இந்நிலையில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகர் மன்சூர் அலிகான் அஜீத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறயிருப்பதாவது,

தம்பி அஜித்துக்கு மன்சூர் அலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்து விட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்புடுகிறீர். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோவில்களுக்கு வந்திருக்கக் கூடாதா..? உரிமையுடன், நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Mansoor Ali Khan has written a letter to Ajith putting forth some questions.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil