»   »  'எடப்பாடி, இனி நீ டெட்பாடி'.... விஷால் மேடையில் முகம் சுளிக்க வைத்த மன்சூர் அலிகான்!

'எடப்பாடி, இனி நீ டெட்பாடி'.... விஷால் மேடையில் முகம் சுளிக்க வைத்த மன்சூர் அலிகான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மோசமாக நக்கலடித்த மன்சூர் அலிகான்!

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் மன்சூல் அலிகான் மற்றும் பிரகாஷ் ராஜ் பேச்சுகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

Mansoor Alikhan attacks CM Edappadi in Vishal's press meet

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கடுமையாகக் கிண்டலடித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எடப்பாடி, இனி நீ ஒரு டெட்பாடி என அவர் பேசியதைக் கண்டிக்காமல், அமைதியாக அமர்ந்திருந்தனர் அணியின் பிற முக்கியஸ்தர்கள். குறிப்பாக தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஷால் இதைக் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே மேடையில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஞானவேல் ராஜா, இன்று முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரகாஷ் ராஜ், 'உன்னைவிட எனக்கு தமிழ் நல்லா தெரியும்... அதனால் எனக்கு தேர்தலில் போட்டியிட தகுதி அதிகம்', என்றார்.

மேலும் இப்போதைய தலைவர் கலைப்புலி தாணுவை கடுமையாக அவர் தாக்கிப் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

"கலைப்புலி தாணு எப்படிப்பட்டவர்... அவரது திரையுலக அனுபவம் என்ன.. தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு... என எதுவுமே தெரியாத பிரகாஷ்ராஜ் இப்படியெல்லாம் பேசுவது மிகத் தவறு.. இது விஷால் அணிக்குதான் பெரும் பின்னடைவு," என்றனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும்.

English summary
In Vishal's press meet, actor Mansoor Alikhan heavily attacked CM Edappadi Palanisamy as 'Deadbody'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil