For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வயிற்றின் மேல் பாறாங்கல் உடைத்து, 50 முட்டை குடித்து, பீர் பாட்டில் உடைத்து மன்சூர் அலிகான் 'அதிரடி'

  By Shankar
  |

  பரபரப்பு, பப்ளிசிட்டிக்காக பல கோக்கு மாக்கு சமாச்சாரங்களைச் செய்வதில் மன்சூர் அலிகான், இன்னொரு ஹூஸைனி.

  தன் சொந்தப் படங்களுக்கு மன்சூர் அலிகான் வைக்கும் பெயர்களே ஏடாகூடமாகத்தான் இருக்கும்.

  விவகாரமான தலைப்புகள்

  விவகாரமான தலைப்புகள்

  ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன், ராவணன், வாழ்க ஜனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு , என்னைப்பார் யோகம் வரும் மற்றும் லொள்ளுதாதா பராக் பராக்...

  -இவையெல்லாம் மன்சூர் அலிகான் இதற்கு முன் தன் சொந்தப் படங்களுக்கு சூட்டிய தலைப்புகள்.

  அதிரடி

  அதிரடி

  போனால் போகட்டுமென்று இந்த முறைதான் தனது சொந்தப் படத்துக்கு சிக்கனமாக அதிரடி என்று தலைப்பு வைத்துள்ளார்.

  இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. கலைப்புலி எஸ் தாணு , கலைப்புலி சேகரன் கலந்து கொண்டனர். மன்சூரலிகானின் மகன்களும் சிறப்பு விருந்தினர்களும் சேர்ந்து பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வடிவில் பிரத்யேகமாகச் செய்யப்பட்ட கேக்கினை வெட்டினார்கள்.

  எல்லாமே மன்சூர்தான்...

  எல்லாமே மன்சூர்தான்...

  இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி இசையமைப்பதுடன் இயக்கவும் உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

  வயிற்றின் மீது கருங்கல் வைத்து சம்மட்டியால் உடைப்பு

  வயிற்றின் மீது கருங்கல் வைத்து சம்மட்டியால் உடைப்பு

  படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்து விட்டு துவக்கவிழாவை அதிரடியாக நடத்தாமல் இருந்தால் நன்றாக இருக்குமா..? அதனால், அதிரடி படத்துவக்க விழாவில், தனது வயிற்றின் மீது 125 கிலோ எடை உள்ள நபரை நிற்க வைத்து உடற்பயிற்சி மன்சூரலிகான் உடற்பயிற்சி செய்தார். தொடர்ந்து அவரது வயிற்றில் மிகப்பெரிய கருங்கல் வைத்து அதனை ஸ்டண்ட் கலைஞர்கள் சம்மட்டியால் உடைத்தார்கள்.

  தலையில் தீ

  தலையில் தீ

  அடுத்து நெருப்பு பற்றி எறியும் அடுக்கி வைக்கப்பட்ட ஓடுகளை கைகளாலும் நெற்றியாலும் உடைத்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவர் தலையில் தீப்பிடித்தது. அங்கிருந்த உதவியாளர்கள் ஓடிவந்து கோணி பையால் அழுத்தி தீயை அணைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  பீர் பாட்டில்களை உடைத்தார்

  பீர் பாட்டில்களை உடைத்தார்

  அடுத்து இருபதுக்கும் அதிகமான காலி பீர்பாட்டில்களை வெறும் கைகளால் உடைத்தார். மேற்கண்ட சாகங்களை மேடையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காண்பித்தார் மன்சூரலிகான்.

  50 நொடிகளில் 50 முட்டைகளை குடித்தார்

  50 நொடிகளில் 50 முட்டைகளை குடித்தார்

  அத்தோடு விட்டாரா மனிதர்... 50 முட்டைகளை 50 நொடிகளில் உடைத்து உள்ளே தள்ளினார். தொடர்ந்து நடிகர் கிங்காங் பள்ளியில் பயிற்சி பெற்ற குழந்தைகளின் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

  கருத்து சொல்லலண்ணா எப்படி...

  கருத்து சொல்லலண்ணா எப்படி...

  முத்தாய்ப்பாக, திருட்டு விசிடிக்கு எதிராகவும் திரையுலகம் படும் பாட்டையும் விளக்கும் விதமாகத் தான் எழுதி இசையமைத்த டைட்டில் பாடலை தனது குழந்தைகளுடனும் தனது படக்குழுவினருடனும் சேர்ந்து பாடினார் மன்சூரலிகான்.

  இந்த ஆண்டின் முதல் படம்

  இந்த ஆண்டின் முதல் படம்

  ஜனவரி 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் முதல் படம் இந்த அதிரடி. ஆரம்பமே இப்படியா என கொஞ்சம் மிரண்டுதான் போனார்கள் வந்திருந்தவர்கள். இவர்களை விட அதிகம் மிரண்டவர் படத்தின் பிஆர்ஓ செல்வகுதான். நிகழ்ச்சி வந்த ஒருத்தர் இவரது காரின்மீது வண்டியை மோதிவிட, அது பல்லிளித்துவிட்டது. 2014 ஆரம்பம் இப்படியா இருக்கணும் என தன் சோகத்தை பகிர்ந்து கொண்டார்!!

  English summary
  Actor Mansoor Alikhan launched his new movie Athiradi with lot of fun and live stunts at RKV studio.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more