»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ததால் நடிகர் மன்சூர் அலிகான் மூன்றுஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட கூடாது என இந்திய தேர்தல்ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் பெரியகுளம்தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவருக்குடெபாசிட் தொகை கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தார்.

தேர்தல் ஆணைய விதிமுறைப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல்முடிந்த ஒரு மாத காலத்திற்குள் தேர்தல் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம்செலுத்த வேண்டும்.

ஆனால் மன்சூர் அலிகான் தேர்தல் செலவு கணக்கை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அவர் இனி 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி தேர்தல ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

மன்சூர் அலிகான் பாராளுமன்ற, சட்டமன்ற, சட்டமன்ற மேல்சபை போன்ற எந்தசபைக்கும் உறுப்பினராக போட்டியிட முடியாது என தெரிவித்துள்ளது.

தற்போது மன்சூர் அலிகான் அ.தி.மு.க.வில் இருக்கிறார். வரவிருக்கும் தேர்தலில்அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடவிருந்தார் என்பது முக்கியமானது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil