»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை மந்த்ரா சினிமா உதவி டைரக்டர் ஒருவரை ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ப்ரியம் படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு அறிமுகமானார் மந்த்ரா. தொடர்ந்து லவ்டுடே, கங்கா கெளரி,தேடினேன் வந்தது, பெரிய இடத்து மாப்பிள்ளை, ஆளுக்கொரு ஆசை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சமீப காலமாக வாய்ப்புகள் எதுவும் இல்லாததையடுத்து, சென்னை வடபழனியில் உள்ள அவருடைய சொந்த வீட்டை காலிசெய்து விட்டு, ஹைதராபாத்தில் புது வீடு கட்டி குடியேறினார்.

ஓரிரு தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார். இந் நிலையில் மந்த்ரா திடீரென்று உதவி இயக்குனரான சீனிவாசன் என்பவரைரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் தெலுங்குப் படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.

ஹைதராபாத்தில் மந்த்ராவின் வீட்டில் நடந்த இந்தத் திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கணவரைப் பற்றி மந்த்ரா கூறுகையில்,

சீனிவாசன் உதவி டைரக்டராக வேலை செய்த ஒரு தெலுங்கு படத்தில், நான் கதாநாயகியாக நடித்தேன். அப்போது எங்கள்இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்பு காதலாக மாறியது. அவருடைய திறமையும், புத்திசாலித்தனமும் என்னைக்கவர்ந்தது. மேலும் அவர் மிகவும் நல்லவர். சில தடைகளை மீறித்தான் எங்கள் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதா, வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கும் உரிமையை என் விருப்பத்துக்கு அவர் விட்டுவிட்டார். இன்னும் அது குறித்து நான் முடிவு செய்யவில்லை என்றார்.

மந்த்ரா நடிக்கிறாரா இல்லையோ, அவர் கணவரை இயக்குனராக்கி ஒரு படம் எடுப்பார் என்பது மட்டும் உறுதி. இயக்குனர்களைமணக்கும் எல்லா நடிகைகளும் அதைத்தானே செய்கிறார்கள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil