»   »  கூட்டமே வரல... காட்சிகளை ரத்து செய்யும் திரையரங்குகள்!

கூட்டமே வரல... காட்சிகளை ரத்து செய்யும் திரையரங்குகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும் சினிமா ஸ்ட்ரைக்

சென்னை: போதிய கூட்டம் வராததால் பல திரையரங்குகள் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் ஆரம்பித்து 36 நாட்களாக நடந்து வருகிறது. புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இடையில் சில நாட்கள் திரையரங்குகளும் ஸ்ட்ரைக்கில் பங்கேற்றன. ஆனால் திடீரென்று ஸ்ட்ரைக்கை முறித்துக் கொண்டு ஆங்கில மற்றும் பழைய படங்களைத் திரையிடுவதாக அறிவித்துவிட்டன.

Many theaters cancelled shows

அதன்படி பழைய எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆங்கிலப் படங்களும் திரையிடப்படுகின்றன. இந்தப் படங்களுக்கு சில காட்சிகளுக்கு கூட்டம் வந்தாலும், பல காட்சிகளுக்கு வெகு சிலர் மட்டுமே வருகின்றனர்.

அதிக இருக்கைகள் கொண்ட ஒற்றைத் திரையரங்குகள் நிலைதான் பரிதாபம். சில அரங்குகளுக்கு ஒற்றைப்படையில்தான் ஆட்களே வருகிறார்கள்.

இந்த வசூலைக் கொண்டு தியேட்டர் பராமரிப்பு, மின்கட்டணம் கூட செலுத்த முடியாது என்பதால், அந்தக் காட்சிகளை ரத்து செய்கின்றன திரையரங்குகள். பல திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ்களிலும் இப்போது ஆட்கள் வருவது குறைந்துவிட்டதால் காட்சிகளை ரத்து செய்கின்றனர்.

English summary
Many theaters have cancelled shows due to poor attendance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X