»   »  விமல்-அஞ்சலியின் 'மாப்ள சிங்கம்' தல ரசிகர்களுக்கான விருந்து

விமல்-அஞ்சலியின் 'மாப்ள சிங்கம்' தல ரசிகர்களுக்கான விருந்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விமல், அஞ்சலி, சூரி, மதுமிதா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் நடிப்பில், இன்று வெளியாகியிருக்கும் படம் மாப்ள சிங்கம்.

என்.ஆர். ரகுநந்தன் இசையில், ராஜசேகர் இயக்கியிருக்கும் மாப்ள சிங்கம் படத்தை மதன் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.


விமல், அஞ்சலி 3 வது முறையாக இணைந்திருக்கும் மாப்ள சிங்கம், உண்மையில் சிங்கமாக மாறி ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்க்கலாம்.


மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம்

கலகலப்பு, தூங்கா நகரம் படங்களுக்குப் பின் விமல்- அஞ்சலி 3 வது முறையாக இணைந்திருக்கும் படம் மாப்ள சிங்கம். படம் வெளியாகும் முன்னே இணையத்தில் திருட்டுத்தனமாக மாப்ள சிங்கம் வெளியானது படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தியது. சமீபகாலமாக இளம் நடிகர்கள் தங்களது படங்களில் விஜய், அஜீத் பெயரை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மாப்ள சிங்கம் படமும் இணைந்திருக்கிறது.
உன்னைப் பார்த்த

காதல் மன்னன் படத்தில் இடம்பெறும் 'உன்னைப் பார்த்த பின் பாடலை' விமல் பயன்படுத்தி இருக்கிறார், என சந்தோஷமாக பதிவிட்டிருக்கிறார் தல ரசிகர்.


அஜீத் இப்படியா

அஜீத் என்ன ஸ்டேஷன் ஸ்டேஷனாப் போய் காதலை பிரிச்சு விட்டாரா என்று சூரி கேட்கும் வசனத்தை பதிவிட்டிருக்கிறார் தினு.


அஞ்சலி

தைரியமாக அஞ்சலி பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதாக பாராட்டியிருக்கிறார் சலீம் பாஷா.


மாப்ள சிங்கம் ஓரளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்தாலும், விமல் தனது நடிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
English summary
Vimal, Anjali Starring Mapla Singam Today Released Worldwide, Written& Directed by Rajasekar- Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil