»   »  ஆஸ்கார் ரேஸில் நுழைந்த ‘கோர்ட்’: காக்கா முட்டை, பாகுபலி அவுட்

ஆஸ்கார் ரேஸில் நுழைந்த ‘கோர்ட்’: காக்கா முட்டை, பாகுபலி அவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழி படமான 'கோர்ட்' இந்தியாவின் தேர்வாக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடவுள்ளது. காக்கா முட்டை, பாகுபலி, பிகே ஆகிய படங்களை பின்னுக்குத்தள்ளி சைலன்ட்டாக ஆஸ்கார் விருது ரேஸில் நுழைந்துள்ளது கோர்ட் திரைப்படம்.

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கரில், மற்ற நாட்டு திரைப்படங்களுக்கென ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற அந்தப் பிரிவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் போட்டியிடும்.

தற்போது இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் 'கோர்ட்', இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.2004ல் 'ஷ்வாஸ்', 2009ல் 'ஹரிஷ்சந்திராஸ் ஃபேக்டரி'யின் வரிசையில் இது மூன்றாவது மராத்தி படமாகும்.

பலத்த போட்டி

பலத்த போட்டி

'கோர்ட்' படத்திற்கு பலமான போட்டி கொடுத்தன பாகுபலி, காக்கா முட்டை, மேரி கோம், மாசான், பீ.கே, குற்றம் கடிதல் என 30 படங்கள் போட்டியில் இருந்தன. ஆனால் சூப்பர் ஹிட் படங்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மூத்த நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தலைமையில், 16 பேர் கொண்டு நடுவர் குழு ஒருமனதாக 'கோர்ட்' படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

கோர்ட் பட கதை

கோர்ட் பட கதை

தலைப்புக்கு ஏற்றார் போல கதை ஒரு நீதிமன்றத்தின் உள்ளே நடைபெறுகிறது. மக்கள் விரோத அரசுக்கு எதிராக தன்னுடைய பாடல்கள் மூலம் களப்பணியாற்றி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளேவை காவல்துறை கைது செய்கிறது. மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரை தன்னுடைய பாடல்கள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

ஜோடிக்கப்பட்ட வழக்கு

ஜோடிக்கப்பட்ட வழக்கு

இது உண்மையா? அல்லது அரசு எந்திரங்களுக்கு எதிராக கலகம் செய்யும் களப்பணியாளர்களுக்கு பாடம் புகட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கா? என்பதை நீதிமன்றத்தில் தன் வாதங்கள் மூலமாக நிரூபிக்க இன்னொரு மனித உரிமை போராளியான வழக்கறிஞர் போராடுகிறார். இந்திய நீதித்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் 'கோர்ட்', குற்றம் சாட்டப்பட்டவர், அவருக்காக வாதாடும் வக்கீல், அரசு வழக்கறிஞர், அந்த வழக்கை பார்வையிடும் நீதிபதி என பலரின் பார்வையில் விரிகிறது.

அறிமுக இயக்குநர்

அறிமுக இயக்குநர்

எந்தவித பெரிய நடிகர்களும் இல்லாமல் வெறும் கதையின் பலத்திலேயே பயணம் செய்கிறது 'கோர்ட்' திரைப்படம். முக்கால்வாசி படம் கோர்ட்டுக்கு உள்ளே நடை பெற்றாலும் எந்த இடத்திலும் அலுக்காமல், எதார்த்தத்தை மட்டுமே வெளி கொண்டு வருகிறது. கோர்ட் படத்தை இயக்கி இருப்பது ஒரு அறிமுக இயக்குநர் என்பது கூடுதல் சிறப்பு.

சர்வதேச விருதுகள்

சர்வதேச விருதுகள்

சைதன்யா தம்கனே எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அர்ஜெண்டினாவின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடந்த 17வது சர்வதேச திரைப்பட விழாவில் படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் கோம்பருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

தேசிய விருது படம்

தேசிய விருது படம்

வியன்னா, சிங்கப்பூர், வெனிஸ் திரைப்பட விழாகளில் விருதுகளை குவித்தது மட்டும் அல்லாது சிறந்த திரைப்படம் என தேசிய விருதும் பெற்றுள்ளது 'கோர்ட்'.

ஆஸ்கார் கிடைக்குமா?

ஆஸ்கார் கிடைக்குமா?

இந்த அற்புதமான படம், இந்தியா சார்பில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்கு அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இது வரை இந்தியா சிறந்த பிறமொழி திரைப்படம் பிரிவில் ஆஸ்கார் விருது வாங்கியது இல்லை. கடைசியாக டாப் 5 பட்டியலை தொட்ட படம் லகான். 3.5 கோடி ரூபாயில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோர்ட் இந்த கவலையை தீர்த்து வைக்கும் என்று நம்புகிறது இந்திய சினிமா வட்டாரம்!

English summary
Beating many big-ticket productions and box-office successes, Marathi film 'Court' was on Wednesday selected as India's official entry for the Oscars. Filmed on a shoestring budget of Rs 3.5 crore, debutant director Chaitanya Tamhane's film will now represent the country in the Best Foreign Film category at the Academy Awards. The winner will be announced in February.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil