»   »  போனவாரம் 11 படங்கள்... இந்த வெள்ளிக்கிழமை 10 படங்கள்!

போனவாரம் 11 படங்கள்... இந்த வெள்ளிக்கிழமை 10 படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் ஆச்சு தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு என்று கேட்கும் அளவுக்கு, வாரா வாரம் எக்கச்சக்கமாக புதுப் படங்கள் வெளியான வண்ணம் உள்ளன.

கடந்த வாரம் 11 புதிய படங்கள் ரிலீஸ் ஆகின. இவற்றில் எந்தப் படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது என்று பார்ப்பதற்குள், இந்த வாரம் மேலும் 12 படங்கள் வெளியாகிவிட்டன. டப்பிங் மற்றும் ஆங்கிலப் படங்களும் வெளியாகிவருகின்றன.


இந்த வாரம் 10

இந்த வாரம் 10

இந்த வாரம் இரவும் பகலும் வரும், ஆயா வட சுட்ட கதை, கள்ளப்படம், பட்ற, அகத்திணை, வெத்து வேட்டு, கடவுள் பாதி மிருகம் பாதி, மூச், காலகட்டம், திலகர் உள்பட 10 படங்கள் வெளியாகின்றன. ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளன.


இதில் இரவும் பகலும் வரும் என்னும் படம் கடந்த வாரமே ரிலீசாக வேண்டியது. ஒரு சில காரணங்களால் தள்ளிப்போய் இந்த வாரம் ரிலீசாகவுள்ளது.வாரம் முழுக்க..

வாரம் முழுக்க..

ஒரு தீவிர சினிமா ரசிகர் வாரம் முழுவதும் படம் பார்த்தால் கூட 7 படங்களைத்தான் பார்க்க முடியும். அதற்குள் பல படங்கள் தியேட்டரை விட்டே ஓடிவிடும் நிலை. எனவே பல படங்கள் ரசிகர்கள் பார்க்கும் முன்பே திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுவிடுகின்றன.


கடும் போட்டி

கடும் போட்டி

இப்படி அதிக அளவில் படங்கள் வெளியாவதால், தியேட்டர் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.


இப்போது வெளியாகும் சிறு பட்ஜெட் படங்களுக்கு பெரிய காம்ப்ளக்ஸ்களில் ஒரு காட்சி நேரம் வாங்குவதே பெரும்பாடாகிவிடுகிறது. முந்தைய வாரம் ரிலீசான படங்களில் சில சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை தூக்கிவிட்டுத்தான் புதுப்படங்கள் போட வேண்டியுள்ளது.எல்லா படங்களுமே

எல்லா படங்களுமே

முடிந்த வரை அதிக அரங்குகளில் போட்டு ஆரம்ப வசூல் எடுத்துவிட வேண்டும் என்ற இன்றைய போக்குதான் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.


பெரிய நடிகர்களின் படங்களுக்குத்தான் அதிக அரங்குகள் என்ற நிலைபோய், வெளியாகிற அத்தனைப் படங்களுமே அதிக அரங்குகள் கேட்கின்றன.32 படங்கள்

32 படங்கள்

இந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் மேலும் 6 படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதில் கொம்பனும் அடங்கும். இதன் மூலம் இந்த மாதம் மட்டுமே 32 படங்கள் வெளியாகும் நிலை. ஒரு நாளைக்கு ஒரு படம்.


நல்லதில்ல

நல்லதில்ல

அதிக படங்கள் வருவது இன்டஸ்ட்ரிக்கு நல்லதுதான் என்றாலும், திட்டமிடல் இல்லாமல் புற்றீசல் போல படங்கள் வருவதால் தயாரிப்பாளருக்கோ, திரைத் தொழிலுக்கோ எந்த ஆதாயமும் இல்லாமல் போய்விடும்.


English summary
There are 32, a record number of, new movies releasing this month March in Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil