»   »  இது படம் அல்ல அழகிய கவிதை: 'டோன்ட் மிஸ் இட்'

இது படம் அல்ல அழகிய கவிதை: 'டோன்ட் மிஸ் இட்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கல்கி கொச்லின் நடித்துள்ள மார்கரிடா வித் எ ஸ்ட்ரா படம் ரிலீஸாகும் முன்பே பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

சோனாலி போஸ் இயக்கியுள்ள இந்தி படம் மார்கரிடா வித் எ ஸ்ட்ரா. பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் செரிபரல் பேலஸி என்ற உடல் நலக்குறைபாடால் சக்கர நாற்காலியில் முடங்கியவராக நடித்துள்ளார். அவரை புரிந்து கொண்ட பாசமான அம்மாவாக ரேவதி நடித்துள்ளார்.

உடல் நலக்குறைபாடு உள்ள ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்கி

கல்கி

லைலா என்ற கதாபாத்திரத்தில் சக்கர நாற்காலியில் வலம் வரும் கல்கி கொச்லின் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு நியூயார்க் பல்கலைக்கழத்திற்கு செல்கிறார். பாடல்கள் எழுதும் அவர் எழுத்தாளராக விரும்புகிறார்.

வாலிபர்

வாலிபர்

லைலாவுக்கு வாலிபர் ஒருவர் நண்பராகிறார். அந்த நட்பு காதலாகிறது. பின்னர் அந்த நபர் லைலாவை விட்டு பிரிகிறார். இதனால் மனமுடைந்த லைலா ரேவதியிடம் அம்மா அந்த பையன் என்னை காதலிக்கவில்லை என்று கூறுவதை பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் அதுவாக வருகிறது.

காதல்

காதல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டனில் தனது தாயுடன் தங்கி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார் கல்கி. அங்கு பல்கலைக்கழகத்தில் அவர் காணும் என்கிற பெண்ணை பார்த்து அவர்பால் ஈர்க்கப்படுகிறார். அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிறார்கள்.

லைலா

லைலா

கல்கி கொச்லின் லைலாவாகவே வாழ்ந்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவற்றில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துபவர் கல்கி கொச்லின் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ்

ரிலீஸ்

மார்கரிடா வித் எ ஸ்ட்ரா படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நடந்த டொரண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் படத்திற்கு விருது கிடைத்தது. அந்த விழாவில் விருது பெற்ற ஒரே இந்திய படம் இது தான். எஸ்டோனியாவில் நடந்த டாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் கல்கிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

English summary
Much acclaimed Margarita with a Straw has shown the life of a girl who is affected by cerebral palsy in a beautiful manner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil