Bison Trailer: நம்மூர்ல பிறந்துட்டு கபடி புடிக்காதவன் எவனாவது இருப்பானா? பைசன் டிரைலர் ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பைசன். இந்த படத்தில் த்ருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.

Mari Selvaraj Movie Bison Kaalamaadan Trailer Released Stared By Dhruv Vikram And Anupama Parameswaran
Photo Credit:

ஏற்கனவே பாடல்களில் இடம் பெற்றிருந்த மாண்டேஜ் காட்சிகளுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், தரமானதாக அமைந்துள்ளது. மொத்தம் 3 நிமிடங்கள் 25 நொடிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரை மிகவும் நேர்த்தியாக படக்குழு தயார் செய்துள்ளது. மாட்டின் மண்டை ஓட்டில் தொடங்கும் டிரைலர் அதே மாட்டின் மண்டை ஓட்டை தண்ணீருக்குள் வீசுவதில் முடிகிறது. படத்தில் கபடி மிகவும் முக்கியமான அங்கம் வகுக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

{video1}

பைசன் டிரைலரில் த்ருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜீஷா விஜயன் உள்ளிட்ட பலரது லுக்கும் ரசிகர்களைக் கவரும் வகையில் உள்ளது. பசுபதி அழுத்தம் திருத்தமான வசனம் ஒன்றை பேசுகிறார். அதாவது,” நம்மூர்ல புறந்துட்டு கபடி புடிக்காதவன் எவனாவது இருப்பானா?” என்று கூறுகிறார். அதேபோல், “ ஆனா அதே கபடிதான் என் புள்ளைய கடைசியா எங்க கொண்டு போய் நிருத்தும்னு தெரியும், நம்மூர் காட்டுல நடக்குற சின்ன சின்ன கோபம் எல்லாம் எவ்வளவு பெரிய ரவுடித்தனமாக மாறி இருக்குனு உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ எனக்குத் தெரியும்” என்றும் கூறுகிறார்.

Mari Selvaraj Movie Bison Kaalamaadan Trailer Released Stared By Dhruv Vikram And Anupama Parameswaran
Photo Credit:

த்ருவ் - பசுபதி: மேலும், “ இந்த மாதிரியான ஊர்ல எங்கள மாதிரியான ஆளுங்க எல்லாம் புத்திய தூக்கி முன்னாடி வைக்காம, கத்தியைத் தூக்கி முன்னாடி வைத்தால் குத்தி கிழுச்சு போட்டுட்டு போயிடுவாங்க என்றும், இதுக்குத்தான்டா உனக்கு கபடியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு தலையிலயே அடுச்சுக்கிட்டேன். வந்த வழியில வம்பை விலை குடுத்து வாங்கீட்டயேடா? சத்தியம் பண்ணுடா கபடி மண்ணுனு கெடந்து அலையமாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்றும் கூறுகிறார். டிரைலர் முழுவதும் பெரும்பான்மையாக த்ருவ் விக்ரமின்னின் காட்சிகள் தான் இருந்தாலும், டிரைலர் முழுவதும் பெரும்பான்மையாக பசுபதி பேசும் வசனங்கள்தான் உள்ளது.

அதேபோல் டிரைலரின் கடைசியில் வரும் வசனமும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, “ டேய் கிட்டான்.. இது பத்தாதுடா.. பத்தாது. உன் கையை உடச்சாலும் சரி, காலை உடச்சாலும் சரி.. மேல மேல போவனும் அந்த டாப்புக்கு போவனும்.. உச்சத்துக்கு போவனும். அப்பதான் நாமெல்லாம் இங்க ஒரு ஆளாவே தெரிவோம், டேய் நீ கிளம்புடா” என்று இடம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X